முன ங்க ல் சத் தம் மட் டும் தா ன் கேட் டது ..!! நடி கை சித்ரா தற் கொ லை செ ய்வதற் கு முன் நடந் த து இது தா ன் ..?? அவ ரின் கண வரே கூ றிய த க வல் ..!! வைர லா கும் வீடி யோ ப திவு உ ள் ளே ..!!

0 205

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வி ஜே சித்ரா . இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருந்தார் நடிகை சித்ரா . தன்னை மிகவும் ஒரு தைரியமான பெண்ணாக திரையில் காட்டி வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

மேலும் சித்ராவின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவருடைய கணவர் ஹேமந்த் தான் என்ற குற்றம் சாட்டப்பட்டது . பின்னர் போலீசார் ஹேமந்தை  கைது செய்து விசாரித்தனர் . பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் ஹேமந்த் . இப்படி ஒரு நிலையில் சித்ராவின் மரணம் குறித்த ஒரு முக்கிய தகவலை,

வெளியிட்டுள்ளார் அவரின் கணவர் ஹேமந்த் .அந்தவகையில் அவர் கூறியதாவது , சித்ரா இறப்பதற்கு அன்று இரவு ஷூட்டிங் முடித்துவிட்டு ஒன்றை மணியளவில் ஹோட்டலுக்கு வந்திருந்தார் . வரும்போது சற்று குழப்பத்தில் இருந்ததை நான் கவனித்தேன். ஆனால் அவர் ஹோட்டலுக்கு வருவதற்கு முன்,

என்னிடம் போனில் நன்றாக தான் பேசினார் .எப்போதும் அவர் என்னை கட்டிப்பிடித்து தான் பேசுவார் . ஆனால் அன்று அவர் பெரிய பிரச்சனையில் இருந்தது போல தெரிந்தது. அதனால் நானும் அவர் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று அமைதியாக விட்டுவிட்டேன் .

பின்னர் பால்கனிக்கு சென்ற சித்ரா ரோட்டை பார்த்துக்கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.நான் கூப்பிட்டும் கூட அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்தார் . பொதுவாகவே சித்ரா நைட் சூட்டிங்கில் இருந்து வந்தால் குளித்து விடுவார் . அப்படி அவர் குளிக்க சென்று இருந்தார் ,

நான் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  15 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் வரவில்லை .என்ன ஆச்சு என்று நான் கதவை தட்டினேன் . அவர் திறக்கவில்லை , முனங்கல் சத்தம் மட்டும் தான் கேட்டது. ஒருவேளை சித்ரா அழுது கொண்டு இருப்பாரோ என்று நான் நினைத்தேன் .

பின்னர் உள்ளே போய் பார்த்தபோது தான் தூக்கில் தொங்கியபடி இருந்தாள். நான் அப்படியே அதிர்ச்சியாகி விட்டேன் . பின்னர் ஒன்றும் புரியாமல் அவரை கீழே இறக்கி முதல் உதவி செய்தோம் . ஆனால் அவரின் உயிர் பிரிந்துவிட்டது என்று கூறியிருந்தார் ஹேமந்த் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.