அட, நடி கை குஷ்பூ வின் அ ம்மா இவ ர் தா னா ..?? இவ் வ ளவு நா ளா இது தெ ரியா ம போ ச் சே ..?? முத ல் மு றை யா க வெ ளி யா ன லேட் டஸ் ட் புகை ப் படம் ..!!

0 300

நடிகை குஷ்பு ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . இவர் கடந்த 1988ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார் . இதன் பிறகு அடுத்த ஆண்டே  வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வெற்றிவிழா ,பாட்டுக்கு நான் அடிமை ,கிழக்குவாசல் ,

மை டியர் மார்த்தாண்டன்,  மைக்கேல் மதன காமராஜன் , சின்னத்தம்பி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் .  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் நடிப்பது மட்டுமின்றி தொகுப்பாளராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.  இதனிடையே கடந்த 2000ம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பு . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது சினிமாவில் மார்க்கெட் குறையத் தொடங்கியவுடன் அப்படியே சின்னத்திரை பக்கம் சென்று நடித்து வருகிறார் நடிகை குஷ்பூ . அதுமட்டுமல்லாமல் அரசியலில் பெரிய அளவில் வர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த சில வருடங்களாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் .

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை குஷ்பு தற்போது தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . மேலும் இன்று அவரின் அம்மாவின் பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷலாக பதிவு போட்டு உள்ளார் நடிகை குஷ்பூ . இதோ அந்த பதிவு நீங்களும் பாருங்க…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.