சட்டம் மற்றும் நீதிமன்றம் எதற்காக? பணம் சம்பாதிப்பதற்காகவா..?

0 170

அரசியல், நீதிமன்றம் இரண்டு வியாபாரமும் அழிக்கப்பட வேண்டியவை

அடித்துவிட்டு அடிக்க வந்தான் அடித்தேன் என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்லச் சிறுவயதிலேயே கற்றுக் கொண்டால் நீங்கள் இப்போது நன்றாகச் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களாகி இருப்பீர்கள்.

சட்டம் மற்றும் நீதிமன்றம் எதற்காக?
பணம் சம்பாதிப்பதற்காக.

அரசாங்கத்தின் பெயரில் யாரையும் கொல்லலாம்.
கொள்ளையும் அடிக்கலாம்.
இரவில் காவல்துறை வேடமிட்டு வந்து மிரட்டலாம்.

இப்படிப்பட்ட அரசாங்கம் தேவையா?
தீயிலிடுங்கள் அந்த சாசனங்களை.
தூக்கிலிடுங்கள் நீதிதேவதையின் கண்களைக் கட்டியவர்களை.

உடைத்தெறியுங்கள் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்குறோம் என்று கூறி விளம்பரம் தேடுவோரின் எலும்புகளை.

ஊழல்களின் இராணிக்கு சட்டசபையில் சிலையாம்.
அப்போ இரவுடிப்பயல்களுக்கு ஊர் நடுவில் சிலையா?
அதையும் உடைக்கும் ஒரு கூட்டம்.
அங்கே தொடங்கும் அரசியல் ஆட்டம்.

அடித்து உடையுங்கள் மக்களை ஏமாற்ற தேர்தலுக்கு முன் மட்டும் வீடுதேடி வரும் விவரமான வெள்ளை ஆடைக்காரர்களை..

எவ்வளவு கோடி சுருட்டி வைத்திருக்கிறீர்?
சொல்லுங்களடா,
பொய்யர்களே!
கட்சிக்காக மக்கள் இல்லை.
எதிர்காலம் என்ற ஒன்று உங்களுக்கு எப்போது இல்லை.

தொகுப்பு: மித்திரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.