வேகமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா! அது யாரை எளிதில் தாக்கும்? லண்டனில் வசிக்கும் பிரபல தமிழ்ப்பெண் எச்சரிக்கை

0 465

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் புதிய வகை திரிபு தொடர்பில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துரான தமிழ்ப்பெண் ரிஸ்வியா மன்சூர் பேசியுள்ளார்.கொரோனா வைரஸின் புதிய திரிபின் தீவிர பரவல் காரணமாக, பிரித்தானியாவில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது.இது தொடர்பாக பிபிசி தமிழுக்கு லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர் விரிவாக விவரித்தார்.அவர் கூறுகையில், பிரிட்டனில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா புதிய திரிபு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் 39 ஆயிரம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 350 உ யி ரி ழப்புகள் உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வதென்ற குழப்பமும் பீதியும் மக்கள் மனங்களில் உள்ளது.

இந்த புதிய கொரோனா திரிபு வேகமாக பரவும் தன்மை வாய்ந்ததாக அறியப்படுகிறது. இந்த திரிபு வலிமையானதாக உள்ளது. பொதுவாக வைரஸ் என்பது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த புதிய திரிபு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகவும் வலுவாகவும் பரவுகிறது. அதனால்தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

அனேகமாக ஒரு வாரத்திலோ, இரண்டு வாரங்களிலோ எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் புதிய திரிபு பாதிப்பு நேர்ந்து தனிமைப்படுத்தப்படும் நிலை வரலாம்.”அப்படியொரு சூழல் தொடர்ந்தால், பாதிக்கப்படும் நோயாளிகளை கவனிக்க மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆனால், பழைய கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை எளிதாகப் பாதித்து வந்தது. இந்த புதிய திரிபு 40 வயதளவில் இருப்பவர்களை கூட எளிதாக தாக்குகிறது. வைரஸ் பாதிப்பு தீவிரமானால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வலிமை எப்படி இருக்கிறது என்பது மூன்று, நான்கு வாரங்களுக்கு பிறகே தெரிய வரும்.

மருத்துவர்களான நாங்கள் ஒவ்வொரு முறையும் கோவிட்-19 வார்டுகளுக்கு செல்லும் முன்பாக, கைகளையும் முகங்களையும் சுத்தமாக கழுவிய பிறகு முகக் கவசங்கள், கையுறைகள், தலை முதல் கால் வரை மறைக்கும் பாதுகாப்பு அங்கி ஆகியவற்றை அணிந்து கொள்கிறோம்.

வார்டில் இருந்து வெளியே வந்ததும் அந்த உறைகளை கழற்றி விட்டு மீண்டும் தூய்மைப்படுத்திக் கொண்டு, கை கால்களை கழுவுகிறோம். அத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் பொதுமக்களும் இருந்தால் மட்டுமே இந்த கொடிய வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.