இதற்கு ஆம் என்ற பதில் உங்களிடம் வந்ததா..? இப்போது சொல் மாறவேண்டியது யார்..?

0 328

செயற்கையையும் தெரிந்து கொள்வோம்.

இயற்கை தயாரிப்புகள் ஒரு புறம் இருக்கையில், செயற்கை உரம் போட்டு வளர்த்த கரும்பில் கேரள மாநிலத்திற்கு தயாராகும் ரசாயனம் கலந்த மண்டை/ உருண்டை வெல்லம் தயாராகும் முறையை தெரிந்து கொள்வோம். என் கண்ணுக்கெதிரே இரசாயனங்கள் கலந்து உருண்டை வெல்லம் தயாரிப்பதைப் பார்த்த முதல் அனுபவம்.

தமிழ்நாட்டில் இவர்கள் தயாரிப்பது கேரளாவில் மட்டுமே விற்பனை செய்கின்றனர். காரணம் கேட்டால் தமிழ்நாட்டில் விற்க இன்னும் ரசாயனம் சேர்த்தால் தான் சந்தையில் விற்பனையாகும் என்கின்றனர்.

சரி, தயாரிப்பு முறையை பார்ப்போம்.

1. கரும்பு பிழிந்து சாறெடுத்து ஒரு குழாயின் மூலம் ஒரு தொட்டியை வந்தடைகிறது.

2. பின்பு ஒரு கொப்ரையில்/ பாத்திரத்தில் சுமார் 240 லிட்டர் சாறு அடுப்பில் காய்க்கப்படுகிறது.

3. சிறிது நேரத்தில் அதில் சுமா‌ர் 100 முதல் 200 கிராம் வரை சுண்ணாம்பு சேர்கின்றனர்.

4. அக்கலவை கொதித்து வருகையில் சோடா (Sodium Bicarbonate) 200 கிராம் அளவு சேர்கின்றனர்.

5. பின்பு Hydros எனச் சொல்லப்படும் Hydro Sulphate 25 கிராம் அளவு தெளிக்கின்றனர்.

6. ஒன்றரை மணி நேரம் பின்பு பதம் வந்தவுடன் ஒரு மரத் தொட்டியில் ஊற்றி மேலும் சோடா சேர்த்து 🙁 கலந்து ஆறவிடுகின்றனர்.

7. பதமாக உருண்டைப் பிடிக்கும் அளவு ஆறவிட்டு உருண்டைகளாக்கின்றனர். நாட்டு சர்க்கரையாக வேண்டுமெனில் மேலும் 50 கிராம் அளவு மேலும் Hydros சேர்க்கப்படுகின்றது.

ஆக, சுண்ணாம்பு கெட்டித்தன்மை ஆக, சோடா அழுக்கு நீக்க மற்றும் Hydros நிறத்திற்கும் கேரளா சந்தைக்கு தயாராகிறது. (இந்த ரசாயனத்தால் என்ன கேடு என்று Google ஐக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.)

ஆமா, இது கேரளாவுக்கு மட்டுமே குறைவா ரசாயனம் போட்டு தயாரிக்கப்பட்டு கொஞ்சம் dark color ஆ இருக்கே.. அப்போ நம்ம தமிழ்நாடு சந்தை quality என்ன? மேலும் என்ன ரசாயனம் சேர்க்கப்படுகிறது? அதையும் தெரிஞ்சுக்குவோமே..

நம்ம தமிழ் மண்ணின் மைந்தர்கள் கொஞ்சம் வெள்ளை மோகம் பிடித்தவர்கள். வெள்ளை அரிசி என ஆரம்பித்து கட்டிக்குற பொண்ணு வரைக்கும் வெளுப்பா இருக்குறதையே விரும்புறாங்க. தயாரிப்பாளர்களுக்கு தங்கள் பொருள் விக்கணும் நல்ல லாபம் வேண்டும் அவ்வளவே.

மேலும்,
– சூப்பர் எனச் சொல்லப்படும் Super Phosphate ஒரு கொப்பரைக்கு அரை கிலோ விகிதம்.
– Sulphonite எனப்படும் dreadful chemical ஒரு கரண்டி.
– கலப்படத்திற்கு சுமார் 300 கிலோ ரசாயனம் கலந்த வெள்ளை சர்க்கரை.

ஆமா.. இதையெல்லாம் தின்னா ஏன் வியாதி வராது? ஆர்கானிக் எனும் சந்தையில் விற்கப்படும் நாட்டுச் சர்க்கரை மேலும் சந்தேகமே எழுகிறது.

தயாரிப்பாளர்களிடம் நான் கேட்ட கேள்வி:
சுண்ணாம்பு கூட சரிங்க இந்த Hydros இல்லாம செய்யலாமல்லவா எனக் கேட்டால், முன்பெல்லாம் இதச் சேர்க்காமலே தரமான சர்க்கரை செய்து வந்தோம்.

கருப்பாக சேர்வதை சாராயம் காய்க்க வாங்கிச் சென்று விடுவார்கள், ஆனால் இப்போது அதுக்கும் வழி இல்லை. மக்கள் மலிவான பொருள், பார்க்க கலர் லைட்டா இருக்கணும்னு அடுக்கடுக்கா எங்களுக்கு சவால் வைத்தால் நாங்கள் தான் என்ன செய்ய என பதிலளித்து மனதை மேலும் கனக்க வைத்து முடித்தார்.

இதை படித்துவிட்டு எல்லாம் கலப்படமா என tension ஆவதற்கு முன்பாக, உங்களை ஒரு சில கேள்வி கேட்டுக்கங்க..

– நீங்க நிறம் மோகம் பிடித்தவரா?
– நீங்க மலிவு விலை என்று ஒரு எண்ணத்தை வைத்து பொருள் வாங்குபவரா?

இதற்கு ஆம் என்ற பதில் உங்களிடம் வந்ததா?
அப்ப sorry ங்க மொதல்ல மாற வேண்டியது நீங்க/ நாம தான்.

வாழ்க வளமுடன்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.