வெற்றிகரமான நாட்டு மாட்டு பால் பண்ணையாளரா நீங்கள் உண்மையை கூறுங்கள்..?

1 939

நாட்டு மாடுகளை கொண்டு பால் பண்ணை நடத்தி வரும் குறிப்பாக வட இந்திய மாடுகளை கொண்டு பால் பண்ணை நடத்தி வரும், குறிப்பாக 10க்கு மேற்பட்ட வட இந்திய கறவை மாடுகளை கொண்டு பால் பண்ணை நடத்தி வரும் பண்ணையாளரா நீங்கள்..??

இது வரை யாராவது உண்மை நிலை கூறியுள்ளீர்களா…???

எதை பற்றி என்கிறீர்களா..??

1. நான் 100% லாபத்தில் தான் பால் பண்ணையை நடத்திக்கொண்டுள்ளேன் என கூறமுடியுமா…??

2. நான் செய்த முதலீட்டையாவது இது வரை பால் மற்றும் பால் பொருட்களை விற்று ஈட்டியுள்ளேன் என்று கூறமுடிமா..???

3. எங்களின் (குடும்பத்தாரின்) உழைப்புக்கு ஏற்ற சம்பளமாவது ஈட்டியுள்ளேன் என கூற முடியுமா..???

4. வாங்கி வந்த மாடுகளை அனைத்து சீராக பால் தருகின்றன என கூற முடியுமா..???

5. வாங்கி வந்த மாடுகள் அனைத்தும் சீரான இடைவெளியில் சினை பிடித்து கன்று ஈன்றுள்ளன என கூற முடியுமா..???

6. ஏன்டா இதில் வந்து மாட்டிக்கொண்டோம் என நினைக்கவே இல்லை எனக்கூற இயலுமா..???

7. சாணம் அல்ல, மாடுகளை பராமரிக்க, பால் கறக்க சரியான வேலை ஆட்கள் கிடைக்கின்றனரா…??? இல்லை நாங்கள் தான் அல்லல் படுகிறோம் என்கிறீகளா…??

8. நான் 100% தீவனத்தை நானே உற்பத்தி செய்து கொள்கிறேன். காசு கொடுத்து பசுந்தீவனம் & வறண்ட தீனங்களை வாங்கவில்லை எனக் கூற இயலமா..???

9. குறிப்பாக நமது தாத்தாக்கள் யாரும் பால் பண்ணைகளை வைத்து பொருள் ஈட்டவில்லை. அவர்கள் தேவைக்கான மாடுகளையே பராமரித்து வந்தனர். அது ஏன் என்று யோசித்துள்ளீர்களா..??

10. அப்ப வட இந்தியாவில் மட்டும் எப்படி மாடுகளில் லாபம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் 95% மேல் மாடுகளை யாரும் கட்டி போட்டு தீவனம் கொடுப்பதில்லை மாறாக நாம் செம்மறி ஆடுகளை பராமரிப்பது போலத்தான் வளர்கின்றனர்..!!

இதற்கான பதில் யாரிடமும் எந்த பெரிய பால் பண்ணையாளர்களிடமும் இல்லை…

அப்படி இருக்க வட நாட்டு மாடுகளை கொண்டு பால்பண்ணை நடத்தி வரும் பொரும்பாலனவர்கள் ஒரு மாயை உருவாக்கி அதன் மூலம் லாபத்தை ஈட்ட முற்பட்டு மேலும் மேலும் முதலீடுகளை செய்து கொண்டே தான் உள்ளனர்.???

பெரும்பாலான பால் பண்ணையாளர்கள் நஷ்டத்தை சரிகட்ட இன்று பலர் மாடுகளை வடக்கில் இருந்து வாங்கி வந்து விற்று பொருள் ஈட்ட முற்படுகின்றர்..
உண்மை தானே..

அப்ப நாட்டு மாட்டு பால் பண்ணை நடத்துவதில் லாபம் இல்லையா…???

லாபம் உண்டு எப்படி..!!

1.கறவை மாடுகளின் எண்ணிக்கை 5க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. வேலை ஆட்களை குறைத்துவிட்டு சொந்த ஆட்களே பரிமாறிக்க வேண்டும்.

3. பாலை நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் விற்காத பாலை தயிர், நெய் & பன்னீர் என மதிப்பு கூட்ட வேண்டும்.

4. மாட்டின் சாணம் முதல் கோமயம் வரை மதிப்பு கூட்ட வேண்டும்.

5. மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் மற்றும் வறண்ட தீனங்களை நாமே 100% நமது வயல்களில் உற்பத்தி செய்து கொள்ள வேட்ண்டும்.

6. ஹைட்ரோ போனிக்கெல்லாம் நமக்கு ஒத்து வராது ஆனால் அசோலா எளிமையான வழியில் மற்றும் குறைந்த செலவில் உற்பத்தி செய்து கொள்ளலாம்.

7. கூடுமான வரை அடர்தீவனத்தை நாமே தானியங்களை வாங்கி அரைத்துக் கொள்ள வேண்டும்( மக்காச்சோளம் + நெல் ஊம்மி தவிடு + பருப்பு குருணை + செக்கு புண்ணாக்கு + சிறு தானியங்கள் + தாது உப்பு + நாட்டு சர்க்கரை + கல் உப்பு).

8. கூடுமான வரை பால் வற்றிய மாடுகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

9. 100% செயற்கை கருவூட்டல் செய்யாமல் 100% பூச்சி காளைக்கு இனச்சேர்க்கை செய்வதன் மூலம் பொருள் மற்றும் காலத்தை மிச்சப்படுத்தலாம்.

10. முடிந்த வரை உள்ளூர் மற்றும் நம் மாநில இனங்களை தெரிவு செய்வது சிறப்பு.

11. இல்லை வட இந்திய மாடுகளைத் தான் வாங்குவேன் என்றால் முடிந்த வரை 5க்கு மேல் வைத்துக்கொள்ளாதீர்கள். அதிகம் பால் தரும் (15-20 லிட்டர்) பால் தரும் எனும் மாடுகளை லட்சங்கள் கொடுத்து வாங்காதீர்கள் மாறாக 8-12 லிட்டர் வரை தரும் நடுத்தர மாடுகளை தெரிவு செய்வீர்.

12. 100% நேரில் சென்று 3வேளை கறந்து பார்த்து வாங்கலாம் அல்லது நம்பிக்கையான நபரிடம் மட்டுமே நியாயமான விலைக்கு வாங்குங்கள்.

வட இந்திய மாடுகளின் மேல் நமக்குள்ள மோகத்தை பலர் தவறாக பயன்படுத்தி பொருளீட்டும் நோக்கில் அநியாய விலைக்கு தரமற்ற மாடுகளை விற்கின்றனர் அவர்களிடம் 100% ஜாக்கிரதை.

தோராயமாக 10 மாடுகளிற்கான பால் பண்ணை மாதிரி வரவு செலவீனங்கள்:-

நிரந்தர முதலீடு:-

10 மாட்டிற்கான கொடகை – 1 லட்சம்.
10 மாடுகள் வாங்க (10 * 80) – 8 லட்சம்.
இதர செலவினங்கள் – 1லட்சம்.

அன்றாட செலவினங்கள்:-
கால் டன் மக்காசோளத் தட்டு – ₹.1,000/-.
வைக்கோல் 2 பேல் – ₹.500/-.
அடர்தீவனம் – ₹.1500/-
2 வேலை ஆள் சம்பளம் – ₹.800/-
பிற செலவினங்கள் – ₹.200/-

*கன்று குட்டி தீவன செலவு குறிப்பிடவில்லை

ஆக மொத்தம் 10 மாடுகளிற்கான அன்றாட செலவினங்கள் ₹.4000 – 4500/-

30 * 4000 ::: ₹.1,20,000/- +
10 லட்சத்திற்கு வட்டி ::: ₹.10,000 + நமது உழைப்புக்கு சம்பளம் :: ₹.10000 ::: மொத்த ₹.1,40,000/- செலவு.

1வருடம் 4மாதங்களிற்கு ஒரு கன்று குட்டி, அப்ப தோராயமாக 200நாள் * 7லிட்டர் பால் :::2100 பால் * ரூ.70 :: ₹.1,47,000 ஒரு மாட்டில் ஒரு ஈத்தில் கிடைக்கும் வருவாய்.

10 மாடு மூலம் வருவாய் – 10* 1,47,000 ::: 14,70,000 + பத்து கன்று விற்றது1,50,000 + சாண எரு விற்றது 1,50,0000.

ஆக மொத்த வருவாய் ₹.18,00,000/-.

மொத்த செலவு:
₹.1,40,000 * 16 மாதம் ::: ₹.22,40,000/-.

அப்ப நஷ்டம் ₹.4,40,000/-

இது ஒரு தோராயமான கணக்கு விபரம்.

நான் கூறியது அனைத்தும் நான் கண்ட அனுபவ பகிர்வேயாகும்.

பொதுவாக வட இந்திய மாடுகளை கொண்டு பால் பண்ணை அமைத்து லாபமடைவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆனால் வட இந்திய மாடுகளை வாங்கி வந்து பால் பண்ணை அமைத்து நஷ்டமடைந்தோர் எண்ணிக்கை அதிகமே.

பொதுவாக தெரியாத தொழிலில் / அனுபவமில்லாத எந்த தொழிலையும் மேலோட்டமாக கனித்து கால் வைக்காதீர்கள் தோழமைகளே..

நன்றிகள்..

கட்டுரையாளர் : திருப்பூர் மகேஷ்குமார்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு.

You might also like
1 Comment
  1. vijayakumar Manoharan says

    நன்றி . மிகவும் பயனுள்ளதாக உள்ளது .

    வேறு ஏதாச்சும் சிறு தொழில் செய்வது பற்றி கட்டுரை இருந்தால் அனுப்புங்கள்.
    [email protected]

    முதலீடு : 1 – 2 லட்சம் .

    return on Investment : 1 இயர்

Leave A Reply

Your email address will not be published.