விவசாயத்தை காப்போம் Tamilnadu MEMES கடந்து வந்த பாதை..!

0 318

2016 நவம்பர் விவசாயி மகன் என்று பெயரில் பக்கம் தொடங்கினோம் அன்று முகநூல் பக்கத்தின் பயன்பாடு தெரியாததால் பதிவிடவில்லை..!


டிசம்பர் தொடங்கியது ஜனவரியில் சல்லிகட்டு வீட்டில் கட்டுத்தரியில் காளை திமிரியது டிசம்பர் முதல் சல்லிகட்டு பற்றி தினம் தோறும் பதிவிட்டோம் பக்கத்தை பின் தொடர்பவர்க்ள அன்று 2000+ ஆனால் பதிவிட்ட பதிவுகள் லட்சம் நபர்களின் ஆதரவை தாண்டியது..!

அன்று பதிவிட ஆரம்பமானது இன்றுவரை நிறுத்தவில்லை..!

பல முகநூல் பக்கங்களிடம் விவசாயிகளை பற்றிய பதிவை அனுப்புகிறோம் பதிவிடுங்கள் என்று முறையிட்டேன் சாதாரனமாக கடந்து சென்றுவிட்டனர் கண்டுகொள்ளாமல்

பிறகு நாமே பதிவிடுவோம் என்று களத்தில் இறக்கினோம் பல முகநூல் பக்கங்களும் எங்களது பதிவுகளை வைத்து அவர்களின் பக்கத்தில் பதிவிட்டு புகழை தேடிக்கொண்டார்கள்..!

பிறகு பதிவிடும் கருத்துக்களில் லோகோவை பயன்படுத்த தொடங்கினோம்..!

பெரும்பாலும் விவசாயம் பொதுநல கருத்துகளையோ பதிவிட்டோம்..!
தனியாக ஆரம்பித்த ஒரு பக்கம் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சமூகத்தில் வெளிவர தொடங்கியது அன்று விவசாயி மகன் என்று இருந்த பெயரை விவசாயத்தை காப்போம் Tamilnadu MEMES என்று பெயரை மாற்றினோம்..!
500 நாட்களில் 520000 உறவுகள் இணைந்தார்கள்..!

பல நிறுவன பொருட்களின் உண்மை தன்மையை வெளியிட்டோம் சில தடைகள் வந்தது..!
பலர் இந்த பக்கத்திற்கு லட்சத்தில் விலை வைத்தார்கள்…!

சிலர் ரிப்போட் அடித்தார்கள்
ஆனால் இதுவரை எந்த ஒரு பொய்யான செய்தியும் பதிவிட்டது இல்லை பெரும்பாலும் எழுத்து பிழைகள் எங்களின் பதிவில் வரும் அவை எதிர்பாரா விதமாக வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.