நாய்ங்க தானே பெருசா என்ன பண்ணிட போவுதுங்க அப்புடிதானே நினைக்கிறோம்..?

0 437

மூணாறு பகுதியில் ஒரு நாய் லாஸ்ட் அஞ்சு நாளா தன்னோட எஜமானரை தேடி சுற்றி சுற்றி வருது. பெரும் பாடுபட்டு ஒவ்வொரு உடலையும் மீட்பு படையினர் மீட்கும் போது அது நம்மை வளர்த்த எஜமானரா, நமக்கு உப்பிட்டவரா -அப்படீன்னு பதறிப் போய் ஓடி பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருது. ஆம்.. இந்த நாயை வளர்த்த தொழிலாளியின் குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

பேரிடரில் இருந்து தப்பித்த இந்த நாய் தன்னுடைய எஜமானர் இந்த மண்ணின் கீழ் எங்காவது இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முழு பேரழிவு பகுதியையும் அலசி வருது. கடந்த சில நாட்களாக, இந்த நாய் எல்லோரையும் போலவே தன்னை வளர்த்தவர்கள் உடலைக் காண்பதற்காக அங்கேயே இருந்து வருகிறது.இதை பார்க்கும் மீட்பு படையினர் நாயின் பாசத்தை பார்த்து மெய்சிலிர்த்து போயினர்.

ஒவ்வொரு உடலை எடுக்கும் போது இந்த நாய் ஓடி வந்து பார்ப்பது அங்கிருப்போர் கண்களை குளமாக்கி வருது. மேலும் உணவில்லாமல் தவித்து வரும் இந்த நாய்க்கு அங்கிருக்கும் மக்களும் மீட்பு படையினரும் உணவு கொடுத்தால் அதை சாப்பிடுவதில் சிறிதும் ஆர்வம் காட்டாமல் தனது எஜமானரை தேடி வருது.😢

You might also like

Leave A Reply

Your email address will not be published.