சூரியகாந்தி பயிரிடும் அமெரிக்க விவசாயின் யதார்த்தமான பதில்..!

0 102

இன்று ஒரு சூரியகாந்தி மலர்ப்பண்ணைக்கு போனேன்.

35 ஏக்கரில் முழுக்க சூரியகாந்தி மலர்கள்., விடியோ பதிவாக எடுத்தென். நாளை பதிவு வரும்.

பண்ணை உரிமையாளரை பார்த்தேன். அழுக்கு படிந்த உடை, சாக்ஸ் இல்லாத ஷூ….35 ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் பண்ணையார் கெத்துடன் இல்லை. தொழிலாளி உடையில் தான் இருந்தார்.

சூரியகாந்தி விதைகளை பறவைகளுக்கான உணவாக மட்டுமே விற்பாராம். சொற்ப அளவில் சூரியகாந்தி எண்ணெயும் எடுப்பார். ஆனால் அது மெயின் பிசினஸ் இல்லை, பறவைகளுக்கான உணவாக தான் விற்பனை ஆகும்.

இங்கே நிறையபேர் பறவைகளை வளர்ப்பார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வீட்டு தோட்டத்தில் பறவைக்கு உணவளிக்க இவ்விதைகளை வாங்கி போட்டுவிடுவார்கள். அதன்பின் நாள் முழுக்க வித விதமான பறவைகள் வந்து தோட்டத்தில் உண்ணும். காண கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.

“மே 12ம் தேதி ஒவ்வொரு வருடமும் விதைகளை நடுவேன். அக்டோபர் மாதம் விளைச்சலுக்கு தயாராகிவிடும். $450 செலவில் விதைகளை வாங்கினால் 35 ஏக்கருக்கு நட்டுவிடலாம். சூரியகாந்தி விதைகளை வெறுமனே விதைக்கமுடியாது. விதைகளை பூச்சிகள் உண்டுவிடும் என்பதால் மேலே பெர்ட்டிலைசர் போட்டுதான் விதைப்போம்.தண்ணிர் எதுவும் வேண்டியதில்லை. நட்டு வைத்தால் போதும். ஆனால் ஏக்கருக்கு $1200 பக்கம் லாபம் கிடைக்கும். ஆண்டுக்கு 35 ஏக்கர் நிலத்தில் எனக்கு $42,000 லாபம் கிடைக்கும்.

கூடுதல் வருமானத்துக்கு சூரியகாந்தி பண்ணை டூர்களை ஏற்பாடு செய்வேன், சூரியகாந்தி எண்ணெய் எடுத்து விற்பேன். பண்னை டூர்களுக்கு தலா $2. ஆனால் அப்படி கட்டணம் வாங்கினால் அரசு விதிகளின்படி பாத்ரூம் கட்டணும், சானிடைசர் வைக்கணும், குழந்தைகளுக்கு விளையாடும் இடம் கட்டணும், அதனால் இலவச டூர், ஆனால் நன்கொடை தலா $2 என வைத்துவிட்டேன். இதை காசுக்காக செய்யவில்லை, மனநிறைவுக்காக செய்கிறேன்” என்றார்

ஆக அமெரிக்க விவசாயம் குறித்து அறிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி

பதிவு: நியான்டர் செல்வன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.