எட்டுவழிச்சாலை பின்னே உள்ள மர்மம்..? அரசு திட்டமிட்டே அழிக்கிறது சாமானியன் பார்வையில்..!

0 332

சென்னை – சேலம் 8 வழி சாலை அமைக்கும் பெரும் திட்டத்தை அரசு முதன் முறையாக கொண்டுவந்துள்ளது.
இந்த திட்டம் இரு பெரும் நகரங்களுக்கிடையே இருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும்.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்சாலைகள் அமையவும் வாய்ப்பளிக்கும். சரக்கு குறித்த நேரத்தில் சென்றடையும்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்…..

சாமானியனின் கேள்வி...
சரி அய்யா, 8 வலி (ஆம் வலி தான்) சாலையில் பன்னாட்டு நிறுவனங்களும், தொழில்சாலைகளும் அமைந்தால் அவை இயங்குவதற்கு தேவையான மிக அதிகமான
நீர் தேவையை பூர்த்திசெய்ய என்ன செய்வீர்கள்….??

காவிரியை கேட்பார்களா அல்லது கிருஷ்ணாவை திருப்புவார்களா….எதுவுமே சாத்தியபடாது

மாறாக மிக பெரிய ஆழ்துளை கிணறுகளை அமைப்பார்கள்…நிலத்தடி நீரை உறுஞ்சுவார்கள்…அந்த பகுதியின்
விவசாய பூமியின் நிலத்தடி நீர் மட்டத்தை ஆதாளபாதாளத்துக்கு கொண்டுசெல்வார்கள்…

ஏனென்றால் இப்போதைக்கு நிலத்தடி நீர்மட்டம் அந்தப்பகுதியில் இருப்பது தெரிந்த நிலவரம்…

அதிக தென்னைமரங்கள் இருந்தாலே நிலத்தடி நீர் குறையுமென்று தென்னைமரங்களை விவசாயிகள் குறைத்துகொண்டிருக்கும்
நேரத்தில்….

இவ்வளவு நீரை பன்னாட்டு நிறுவனங்களும், தொழில்சாலைகளும் பங்கிட அரசு அனுமதிக்கலாமா….

இதுதான் இத்திட்டத்தின் மூலம் விவசாயிக்கு கிடைக்கும் முழுமையான பலன்….எனவே சரியாக பரிசீலனை செய்யவும்..

குடிக்கவே விவசாயத்திற்கு தண்ணீர் இல்லா நிலையில் 1 லி₹30 வரை விற்பனையாகும் நிலையில் சாலை அமைக்க எத்தனை TMc தண்ணிரை நீலத்தடியில் இருந்து திருட போகிறார்களோ..?

அனைத்து கேள்விகளும் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளது எட்டுவழிச்சாலை விளக்கம்????????????????

https://www.youtube.com/channel/UCzvoYUARt5mWNxQhIWzyU-A

You might also like

Leave A Reply

Your email address will not be published.