இது என்னாட டாஸ்மாக்குக்கு வந்த சோதனை..! சிரிக்க சிந்திக்க..!

0 408

நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா.

குடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன்.

என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்… இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும் My Lord. அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும் your Honour.

நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா.

குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக்க விடாமல் தடுத்தால் முதலில் பேச்சு வார்த்தை நடத்தும் அதில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் காவல்துறை யை வைத்து தடியடி நடத்தி அரசுப்பணியை தொடருவார்கள் அல்லவா அது போலவே நான் அரசுப்பணியை தடுத்த என் மனைவியை தடியடி நடத்தி அரசுக்கும், காவல்துறைக்கும் உதவி புரிந்தேன். அது எப்படி குற்றமாகும் my Lord……..

நீதிபதி : நான் இன்றோடு என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.