வேலியில் முளைத்திருக்கும் இந்த குண்டுமணியின் விலை எவ்வளவு தெரியுமா..?

1 4,756

காட்டு பகுதியில் விளையும் ‘குண்டுமணி’ விதைகளை பல்வேறு பயன்பாட்டிற்காக கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

இங்குள்ள மலைப்பகுதியை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் வளர்கின்றன. இதற்கென நத்தத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

குண்டுமணி பயிர் சாதாரணமாக வேலிப்பகுதியில் கொடியாக படர்ந்து வளரும். வெப்ப மண்டல பகுதிகளே இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. நத்தம் வட்டாரத்தில் ஏராளமான மலைக்குன்றுகள் சூழ்ந்து உள்ளன. இங்கு நிலவும் தட்பவெப்பம் குண்டுமணி விளைய ஏற்றதாக உள்ளது.

இப்பகுதியில் மூலிகை சேகரிக்கும் தொழிலானது, நிலம் இல்லாத ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குண்டுமணி விளைந்து காயிலிருந்து வெடித்து வெளிவரும்.

இவற்றை இப்பகுதி தொழிலாளர்கள் சேகரித்து நத்தம் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் விற்கின்றனர். ஒருவர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் 2 கிலோவரை சேகரிக்கின்றனர்.

கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்த குண்டுமணி விதைகளை கிலோ ரூ.80க்கும், அரிதாக விளையக்கூடிய வெள்ளை குண்டுமணியை ரூ.500 க்கும்வியாபாரிகள் வாங்குகின்றனர்.

இங்கிருந்து கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். மூலிகை தைலம், அணிகலன்கள் தயாரிப்பு ஆகியவற்றிற்கு குண்டுமணிகள் பயன்படுவதாக தெரிவித்தனர்

You might also like
1 Comment
  1. SathishKumar A says

    ஐயா
    என் பெயர் சதீஷ்குமார். எனக்கு அனைத்து விதமான குன்றின்மணி விதைகள் வேண்டும். இந்த விதைகள் உங்களிடம் உள்ளதா அல்லது எங்கே கிடைக்கும் என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.
    நன்றி

Leave A Reply

Your email address will not be published.