365 நாளும் மாம்பழம் சாப்பிடுங்க என்று இரு நிறுவனம் ஒட்டுமொத்த மக்களையும் முட்டாளாக்கியது என்பதே நிதர்சனம்..!

0 1,340

பல நிறுவனங்கள் வளர்ச்சி என்ற பெயரில் மக்களுக்கு நோய்களையே பரப்புகிறது அதிலும் குறிப்பாக (maaza, slice) இவைகள் செய்வது மிகப்பெரிய வியாபாரம்…!

பொதுவாக மாம்பழம் கோடைகாலத்தில் காய்ப்பு வந்து ஜுன் ஜுலை மாதங்களில் பழம் பழுக்கும்

ஆனால் 365 நாளும் மாம்பழம் சாப்பிடுங்க என்று இரு நிறுவனம் ஒட்டுமொத்த மக்களையும் முட்டாளாக்கியது என்பதே நிதர்சனம்..!

அந்த பானத்தில் Best before use six months என்று எழுதியிருப்பார்கள் அப்படிபார்த்தால் டிசம்பருக்கு பிறகு எப்படி அவர்களால் விற்பனை செய்யமுடியும்

இப்போது புரிகிறதா வணிகம் அவனிடம் உள்ள பொருளை கெடாமல் பாதுகாக்க விசத்தையும் கலப்பான் என்று..!

பருவநிலைக்கு ஏற்றார்போல இயற்கையின் கொடையை அனுபவித்தால் நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்..!

கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்கள், ஆகாரங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை அதி களவு குடிக்க வேண்டி இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீரை குடிக்க அனைவருக்கும் பிடிக்காது.

அதனால்தான் பெரும்பாலான சுவைமிகு குளிர் பானங்கள், பழரசங்கள், சர்பத் போன்றவைகளை குடித்து உடலையும், உள்ளத்தையும் குளுமைப்படுத்தி கொள்கின்றனர். எண்ணற்ற பழரசங்களும், குளிர்பானங்ளும் பாட்டிலும், பெட்டியிலும் அடைத்து வைத்து கொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஏதேனும் ஓர் இரசாயன கலவை கலந்தே காணப்படும்.

எனவே கோடைகாலத்தில் உடலை குளுமையுடன் திகழ செய்ய வேண்டும் என்று கார்பன் அடைக்கப்பட்ட கேஸ் குளிர்பானங்களையும் பழக்கூழ்ச் சாறுகள் என்று இரசாயன பவுடர் கலந்து பழரசங்களை வாங்கி அருந்தி வருகிறோம். இவை அனைத்தும் உடலுக்கு குளிர்ச்சியை தராது. அத்துடன் உடலில் வேறு விதமான உபாதைகளை ஏற்படுத்தி விடும்.

எனவே நாம் கோடைகாலம் முழுவதும் இயற்கையான முறையில் கிடைக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள், சர்பத்களை நம்முன்னே தயார் செய்தும், அவ்வப்போது தயாரித்து வழங்கும் கடைகளில் வாங்கி அருந்த வேண்டும்.

பெரும்பாலும் நமது வீட்டிலேயே தயார் செய்து பழரசம் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதே சாலச்சிறந்தது. ஏனெனில் கடைகளில் சேர்க்கப்படும் தண்ணீர், அரைப்பான்கள் போன்றவற்றின் தூய்மை பற்றின கேள்விகள் எழக்கூடும்.

வீட்டில் தயாரிக்கப்படும் கோடைகால குளிர்பானங்கள் தினம் தினம் புதிதாய், புதிய சுவை பலவிதமான பழங்கள் இணைந்தவாறும் தயாரிக்கப்படுவதுடன் இவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், உடலில் தங்கும் கழிவுகளை வெளியேற்றவும் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களை தரவல்லதாகவும் உள்ளன.

பழங்களுடன் காய்கறிகள், சில பச்சை கீரைகள் போன்றவைகளும் குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.

முடிந்த அளவு செயற்கையை புறந்தள்ளி இயற்கையோடு வாழுங்கள்

பொதுநலன்கருதி வெளியிடுவோர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.