என்னதான் உன்னிடம் பதில் உள்ளது சொல் தெரிந்து கொள்கிறேன்..?

0 248

என்ன பதில் சொல்லப் போகிறாய்..?
அப்பா எங்கே என்ற கேள்விக்கு திராவிடத்திற்கு வாக்களித்தேன் என்று கூற போகிறாயா..?

பணத்திற்காக வாக்களித்தான் என்று கூற போகிறாயா..?
என்னதான் உன்னிடம் பதில் உள்ளது தெரிந்து கொள்கிறேன்..?

நீட் மூலம் மட்டுமே தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனில் தற்போது உள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு வைக்கலாமே..?

தற்போது உள்ள மருத்துவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள்..?
அன்று நீட் தேர்வினால் மகளை இழந்தான் தகப்பன்
இன்று அதே நீட் தேர்வினால் தகப்பனையும் இழந்தான் மகன்
காவிரிக்கு பல உயிர்கள் பிரிகிறது
ஸ்டெர்லைட் ஆலையால் பல உயிர்கள் பலியாகிறது…!

மீத்தேனால் பல உயிர்கள் கருகிறது
இவற்றை எல்லாம் வேடிக்கைப்பார்க்கும் தமிழக அரசு ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விலை வைக்கிறது

த‌மிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு மகனை அழைத்து சென்ற தந்தை உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்கக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். இந்நிலையில் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தந்தை இறந்தது தெரியாமல் மாணவர் தேர்வு எழுதினார்.காலை 10 மணியளவில் தொடங்கிய நீட் தேர்வு சரியாக ஒரு மணியளவில் முடிவடைந்தது.தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவன் அப்பா எங்கே? என கேட்டது அப்பகுதியில் இருத்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மாணவனை கிருஷ்ணசாமியின் உடல் வைத்திருக்கும் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். கிருஷ்ணசாமியின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.