கர்பிணி ஊக்கத்தொகை அம்பலமாகும் அதன் மருத்துவ அரசியல் பலியாடாகும் கர்பிணிகள்..!

0 2,054

உலக உயிரினங்கள் அனைத்தும் இயற்கையாகவே அவற்றின் குட்டிகளை ஈன்றெடுக்கும் போது மனித இனம் மட்டும் மருத்துவ துறையை நம்பி தன்னை தானே முடமாக்கி கொள்வது இயல்பிற்கு எதிராக முரண்பட்டே இருக்கின்றது.

ஒருபக்கம் மருத்துவ நுழைவு தேர்விற்கான தேர்வு மையங்களை அமைக்க நேரமில்லை என கூறும் இதே அரசு தான் தனது அதிகார வலிமையை முழுவதும் உபயோகித்து மகப்பேறுவிற்கான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

நம்மை சுற்றிய நுண் அரசியல் மிக ரகசியமாக ஒவ்வொன்றாக செய்துவருகிறது. மகப்பேறுவிற்கு அரசு உதவித்தொகை வழங்குவது எல்லாம் அரசின் ரகசிய இலக்கை அடையும் படிநிலைகள் தான். இதன் மூலம் மக்களை தானே முன்வந்து பதிவு செய்யும் முறைக்கு பழக்கப்படுத்தலாம்.

நாட்டு மக்கள் அனைவரும் நவீன மருத்துவ உலகை சார்ந்தே இயங்க வேண்டுமென்ற சூழலை உருவாக்குவதே அரசின் உண்மையான இலக்கு. இதன் மூலம் உலக மருத்துவ முதலாளிகளின் தொழிலுக்கு பெரும் களம் அமைத்து தருவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்க முடியும்.

இங்கே தடுப்பூசிகள், அதனை சார்ந்த மருந்துகள் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை மருந்துகள் என ஏராளம் விற்பனை செய்ய களம் அமைக்கப்படுகிறது. பெண்கள் மகப்பேறுவின் போது போதிய ஊட்டசத்து மிகுந்த உணவுகளை எடுக்க அறிவுறுத்தாத அரசு அவர்களுக்கான எண்களை பதிவு செய்துகொண்டு அவர்கள் எடுத்துக் கொள்ளும் ஆங்கில மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் எவ்வாறு பின்பற்றப்பட்டுள்ளது எனவும்., அது எல்லோருக்கும் சென்றடைகிறதா என்பதையும் மிகுந்த சிரத்தையுடன் சரிபார்க்க முயல்கிறது.

இதன் ஓர் அங்கமாக தான் 6 மாதங்களுக்கு நாட்களுக்கு முன்பு கோயமுத்தூரில் வீட்டில் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாய் தந்தையரை தனது சட்டத்தின் துணை கொண்டு ஒடுக்குகியது இந்த அரசு.

இதில் வேடிக்கை என்னவென்றால் மதுபானங்களால் நம் தேசத்தில் எத்தனையோ உயிரிழப்புகளை சந்திக்கிறோம், மற்றும் இன்ன பிற போதை மற்றும் புகையிலை பொருட்களால் இழப்பு மிக அதிகமாக இருக்கும் சூழலில் அவற்றை தடை செய்யாத அரசு, இவற்றையெல்லாம் தேர்வு செய்து பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் உரிமைகளை குடிமக்களிடமே ஒப்படைத்து இருக்கும் இதே அரசு மகப்பேறுவில் மட்டும் இத்தனை கெடுபுடி சட்டங்கள் ஏற்படுத்தி தீவிரமாக செயல்படுவது ஏனோ.

நாளை மானுட சமூகம் எப்படி இருக்க வேண்டும் என பெரும் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படவுள்ளது, அதற்கான ஓர் செயல் தான் இது.

ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு சாதகமாகும் வரையில் மக்கள் விழிப்படைந்தும் இங்கே யாதொரு பயனுமில்லை என்பதே நம் கண்முன் நிற்கும் நிதர்சனமான உண்மை.

நன்றி
மா.பாலமுருகன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.