ஆம்… அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ஒன்றற கலந்திருக்கிறது ஏராளமான நச்சுப் பொருட்கள். அப்படியா..?

0 469

தினம் தினம்  உங்களின் ஆச் க்ஷசரிய வார்த்தை காதில் விழுகிறது. முதலில் காலை முதல் இரவு வரை நீங்கள் உண்ணும் உணவு வகைகளை பட்டியல் போடுவோமா..? காலை எழுந்தவுடன் பால்  சாப்பிடுகிறீங்க… அப்புறம் 5 இட்லி, தேங்காய் சட்னியுடன் காலை டிபன். மதியம் அரிசி சாதம், சாம்பாருடன், சுவையான சிக்கன் 65. ராத் திரி திடீர்னு ஒரு போன் வரும். ‘என்னங்க… வரும் போது புரோட்டா வாங் கிட்டு வந்திருங்க…. சரி… ஒரு நாள் உணவு கழிந்தது.

இப்ப மேட்டருக்கு வருவோம். பசும் பால், எருமைப் பால் குடித்து வளர்ந்த காலம் கிட்டத் தட்ட காணாமலே போய்விட்டது. பாக்கெட் பால் தான் குழந்தைகளுக்கே தாய்ப் பா லாக மாறிவிட்டது.

நமக்கு காலையில் காபி, டீ இதில் இருந்து தான் போடப்படுகிறது. இந்த பாக்கெட் பாலில் தண்ணீர், உருளை அல்லது சோயா மாவு, காஸ் டிக் சோடா, பார்லி கஞ்சி, மைதா மாவு உள்ளிட்ட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலப்படம் செய்வதாக கூறப்படுகிறது. இதனா லேயே ஒரு சில பாக்கெட் பால் 2 நாள் வரை கெடாமலே அடர்த்தியாக காணப்படுகிறது.

அடுத்துடிபனுக்கு வருவோம். இட்லிக்கு சுவையான சட்னியில் உள்ள தேங்காயிலும் கலப்படம் வந்து விட்டது. இயற்கையாக வளரும் தென்னங் கன்று நட்டு 10 ஆண்டுக்கு பிறகே பலன் தரும். ஆனால், கலப்பின தேங்காய் வகைகள் 2 ஆண்டுகளுக்கே பலன் தரும். தேங்காய் நீரில் சுவை இருக்காது.

கணுக்கள் அதி களவு காணப்படும். குறைந்த ஆண்டுக்கு விளைந்து குறுகிய காலத்திலேய அழிவதால் இவ்வகை காய்கள் உடல் நலனுக்கு ஏற்றதல்ல. பெங்களூர் தக் காளி உள்ளிட்ட காய் வகைகளும் கூட சிறு நீரக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

அரிசி சாதம்… இப்போது நாம் சாப்பிடும் அரிசி பல முறை ஆலை களில் பட்டை தீட்டப் பட்டு வெறும் மாவுப் பொ ரு ளா கத் தான் நமக்கு கிடைக் கி றது. இவ் வகை அரி சி கள் நம் உட லில் சர்க் கரை அளவை அதிகரிக்கவே செய்கிறது.

நம் முன்னோர் உண்டகைக்குத்தல் அரிசி உள்ளிட்டவைகளில் நம் உடலில் இன்சுலின் சத்தை அதிகரிக்கும் மூலப் பொருட்கள் இருந்தன.

மாறி வரும் கலாச்சாரத்தை சர்க்கரை அளவை கூட்டும் அரிசியை உண்டு வருவது கொடுமையிலும் கொடுமை. சரி… அடுத்து சாம் பார். முன்பெல்லாம் சாம்பார் வைத்தால் அதற்கென நேரங்கள் செலவிட்டு தூள் தயாரித்து ஒரு மாதம் வரை ஸ்டாக் வைத்திருப்பார்கள். இப்போது அப்படி இல்லை. சாம்பார் பொடி, ரசப்பொடி, மிளகாய்த் தூள், மல்லித் தூள் எல்லாம் பாக்கெட் வடிவில் வந்து விட்டன. இதில் ஒரு சில டூப் ளி கேட் கம்பெனிகள் மிளகாய்த் தூளில் புளியங் கொட்டைகளை அரைத்து மாவாக்கி கலந்து, செந்நிறத்துக்கு சில லீட் குரோமைட், சூடான் ரெட் என்ற வேதிப் பொருட்களையும் சேர்க்கின்றனர். மரத்தூள், சாணப் பொடியும் சேர்ப்ப தாக கூறப்படுகிறது.

அடுத்து சிக்கன்… நாட்டுக் கோழியை நல்லெண்ணெய் ஊற்றி சமைத்தது அந்தக்காலம். ஹார் மோன் ஊசியை உடலில் செலுத்தி கொழு கொழு வென ஆக்கி விடுகின்றனர். ஒரு பிராய் லர் கோழி 800 முதல் 1200 கிராம் வரை மட்டுமே இருக்க வேண்டும்.

தற்போது 2 கிலோவுக்கு மேல் கோழிகள் விற்ப னைக்கு வரத்து வங்கி விட்டன. ஹார் மோன் ஊசி போடுவதால் வயிற்று உபாதைகள், இளம் சிறுமியர் விரை வில் பூப்படைதல் உள்ளிட்ட சம்பவங் கள் நிகழ்கின்றன. இதில் சேர்க்கும் சிக்கன் 65 பொடியை பிராய்லர் கடையிலே விற்கின்றனர். அலைச்சலுக்கு அஞ்சி இதை தயாரிப்பு தேதி, கம்பெனி கூட பார்க் காமல் சமைக்கும் கொடுமை நம்மிடம் அதிகரித்து விட்டது.

ராத்திரிக்கு வருவோம்… புரோட்டா. இதற்கு முக்கியத் தேவை மைதா மாவு. இதை நன்கு அரைக்கப்பட்ட கோதுமை மாவு டன், பென்சாயில் பெராக் சைடு எனும் வேதிப் பொருளை கலந்து வெண்மையாக்குகின்றனர். இந்த வேதிப் பொருள் நாம் தலைக்கு அடிக்கும் ஹேர் டைக்கு பயன்படுத்தப்படுகிறது. இத் தோடு அல்லாக் சன் என்ற வேதிப் பொருளும் சேர்க்கப்படுகிறது.

இது நீரிழிவை உண்டாக்க கூடிய வேதிப் பொருள். மேலும், மைதாவில் நார்சத்து கிடை யாது. நார்சத்தில்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், நாம் சாப்பிடுவது இர வில் மட்டும் தான்…! முக்கியமாக குழந்தைகளுக்கு அதிகளவு பாதிப்பை புரோட்டா ஏற்படுத்துகிறது.

ஐரோப்பிய கண்டம், சீனா, ஜப் பான் உள்ளிட்ட நாடுகளில் மைதாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதா மாவினால் சிறுநீரக கல், இருதயகோளாறு, நீரி ழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. கேரளாவில் இதற்கு தடை விதிப்பதற்கான ஆய்வில் அம்மாநில அரசு இறங்கி உள்ளது.
போதுமா…

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்… குடிக்கும் நீரில் கழிவு நீர் கலப்பு, தர மற்ற தண்ணீரை மினரல் வாட்டர் என குடிக்கும் கொடுமை நம்ம தமிழ் நாட்டில் தான் நடக்கும். எனவே, கூடுமான வரை நமது முன்னோர் கடைப்பிடித்த உணவுவகைகளை அறிந்து கொண்டு, அவற்றை உண்டு வாழ்ந்தாலே போதும். நாம்… ஆரோக்கியமாக வாழலாம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.