விசம் இல்லா விருந்துகளே இல்லை என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது..! மீளுமா எம் தமிழினம்…!

0 752

பிராய்லர் கோழி சாப்பிடுவதனால் உடல்எடை அதிகமாகிறது. பெண்கள் மிகக்குறைந்த வயதில் பருவம் அடைய பிராய்லர் கோழியும் முக்கிய காரணம். பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஆண்களை விட பெண்களை அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதுபற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான வேதிமருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள்.

அதனால் அதை உண்ணும் போது ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.

சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா பிராய்லர் சிக்கனில் அதிகம் உள்ளது. இதனால் அதனை சாப்பிடும் போது ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளது. பிராய்லர் சிக்கனில் உள்ள இந்த பாக்டீரியாவானது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.

 

பிராய்லர் கோழியில் ஈகோலை என்னும் பாக்டீயாவும் உள்ளது. இவையும் ஒருவகையான புட் பாய்சனை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமின்றி, இவை சிறுநீரக பாதையில் கடுமையான நோய்த்தொற்றுக்களையும் ஏற்படுத்தும். ஆகவே இதனை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

 

பிராய்லர் கோழியின் எடையை அதிகரிக்க, அதில் ஆர்சனிக் என்னும் மெட்டல் சேர்க்கப்படுகிறது. இந்த மெட்டல் உடலினுள் சென்றால், அது புற்றுநோய் மற்றும் இதர தீவிரமான நோய்களை ஏற்படுத்தும்.

பிராய்லர் சிக்கனில் உள்ள அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ், ஹார்மோன்கள் வளர்ச்சியை அதிகமாக்குகிறது. மேலும் இந்த கெமிக்கல், உடலின் மெட்டபாலிசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, இதனால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

முக்கியமாக உயிரைப் பறிக்கும் பறவைக் காய்ச்சல் கூட பிராய்லர் கோழியின் மூலம் தான் பரவும். ஆகவே பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பிராய்லர்கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், மிக குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.

பெண்கள் சிறுவயதிலேயே பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது

விசத்தினை புறம் தள்ளி நாட்டுகோழிகளை சமையுங்கள்…! கிடைக்கவில்லை என்றால் வீட்டில் காய்கறிகளை நீங்களே பயிரிடுங்கள்  அதையாவது ஆரோக்கியமாக உண்ணுங்கள்…!

பொதுநலன்கருதி வெளியிடுவோர்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.