என்ன செய்யபோகிறோம் எதிர்காலத்தில் மாத்திரை மருந்துமே மூன்றுவேலை உணவாக உண்ணபோகிறோமா..?

0 1,365

தொலைதூரப் பயணங்களின்போது அரிதாகஹோட்டல் உணவுகளை பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்றுஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது.

சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூடபிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில்பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்திபவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லாஇடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிகவாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர்.

சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல்பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக்காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொருவேளை உண்ணும்போதும் கொஞ்சம்பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.

நல்ல பிளாஸ்டிக்..?
‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்வேஇல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிகமோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள்பிளாஸ்டிக்கில் உள்ளன.

அதில் ஆறாயிரத்தைமட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம்உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் எனயாருக்குமே தெரியாது. 

பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தானஉணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வுசெய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள்இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்தநிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும்மோசம்.

பிரஷ் முதல் பால் வரை! 
நம் அன்றாட வாழ்வில் காலையில் பல்துலக்குவதில் தொடங்கி இரவில் பால்குடிப்பது வரை எங்கும் எதிலும்பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக்ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர்பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக் மயம்.

பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவைவைக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ளரசாயனம் உணவோடு கலந்து விடும். இப்படிஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும்ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும் நம்உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமானநோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன” என்றார்.

பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள்உணவோடு கலந்து பின்விளைவுகளை எப்படி ஏற்படுத்துகின்றன

“பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை.தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கைமென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது.

இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிகஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர்பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1 என்றுகுறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின்லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின்தூக்கி எறியுங்கள்’ என்றுகுறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம்கவனிக்காமல் பல நாட்களுக்கு அதேபாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும்பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகிநீருடன் கலக்கும். இது புற்றுநோய்உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.

தாலேட்ஸ் உள்ள பி்ளாஸ்டிக்கைப்பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்குமீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பகவளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பகவளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள்ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரைபிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது”

ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்டகவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள்என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவிபறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் எனபேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிகமைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை.

கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்றரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போதுவயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்துஹோட்டல் உணவையே பார்சல் செய்துசாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மைவருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.