யார் இவர்கள்..? இவர்களை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன..? ஊடகம் எங்கே சென்றது..?

1 313

குரங்கனி தீ விபத்தில் மாண்டோர் மாண்டுவிட்டனர் , மீண்டோர் மீண்டுவிட்டனர் , ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தங்களின் உடைகளையும் , உணவுப்பொருட்களையும் மீட்பு குழுவினருக்கும் அங்கு தீயில் சிக்கியவர்களுக்குமாய் செலவிட்ட அப்பாவி மலைவாழ் மக்களைப்பற்றி எந்த டீ வி சேனலும் ஒரு வார்த்தை கூட பேசவோ , அம்மக்களுக்கு நன்றி தெரிவிக்கவோ மனமற்றுப்போனது..

எங்கள் குடும்பம் சார்பாக ஷாஸ்டாங்க நம்ஸ்காரங்களையும் .. அந்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகளையும் இங்கு பதிகிறேன்..

நிச்சயம் அப்பகுதி மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை இன்னும் சில நாட்களில் செய்ய ஏற்பாடு செய்வோம் என உறுதியளிக்கிறேன்..

நம் பிள்ளைகள் மீது போர்த்தி கூட்டி வந்த அத்தனை துணிகளும் , தூளி கட்டி தூக்கி வந்த பெட்சீட்டுகளும்.. காட்டிலும் மேட்டிலும் கடும்பணியிலும் கஸ்டப்பட்டு அவர்கள் வாங்கி வைத்தவைதானே மக்களே !!

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் இவர்கள் உள்ளே சென்று மீட்புபணியை முடுக்கிய பின்னர்தான் செய்தி சேனல்கள் குரஙனிப்பக்கம் திரும்பியது..!

அம்மக்களின் நல்லெண்ணத்திற்கும் , அன்பிற்கும் ஈடாக நம்மால் ஆனதை இணைந்து செய்வோம் ..
அவர்களுக்கான அடிப்படை தேவைகள் நிச்சயம் பாதிக்கபட்டிருக்கும்..

அங்கிருந்து சில இளைஞர்களை மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகளும் நலமுடன் திரும்ப உதவிய உள்ளங்களுக்கு நம்மால் ஆன சிறு உதவியேனும் செய்யனும்..

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பெரிதும் உதவிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்கள்…..

தலைமையேற்றுச் சென்ற சூரியநெல்லி H R T T யூனியன் லோக்கல் கமிட்டி செயலாளர் திரு மாரிப்பாண்டியனுக்கு பாராட்டுக்கள் அவரது அலைபேசி எண் 09446686508 வாழ்த்தலாமே அவரை.. ( நன்றி சகோதரி Yaso Guna )

தேனி பெரியகுளம் பகுதியிலிருந்து யாரேனும் உண்மையான தொண்டுள்ளம் படைத்தவர்கள் முன்வந்தால் அவர்மூலமாக அனைவரும் சேர்ந்து இந்த நல்ல காரியத்தை செய்யலாமே..

 

You might also like
1 Comment
  1. SA.EZHILARASAN says

    உண்மைகளை வெளிப்படுத்த ஊடகங்கள் தவறினாலும்,
    உங்களின் செய்தி வெளியேற்றல்களுக்கு என்னுடைய பணிவான
    நன்றியே சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்….

Leave A Reply

Your email address will not be published.