பொதுவாகவே பெண்கள் ஓட்டிவரும் வாகனத்தையோ, பெண்கள் அமர்ந்திருந்தாலோ அந்த வாகனத்தை நிறுத்தமாட்டார்கள்..!

0 221

பொதுவாகவே பெண்கள் ஓட்டிவரும் வாகனத்தையோ, பெண்கள் அமர்ந்திருந்தாலோ அந்த வாகனத்தை நிறுத்தமாட்டார்கள். அது ஒரு எழுதப்படாத சட்டம், அது ஒரு மாண்பும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வீட்டில் அடைப்பட்டுக்கிடந்த பெண்களின் சுதந்திரத்தை ஊக்கப்படுத்தும் ஒரு செயல், பெண்மைக்கான மரியாதையின் வெளிப்பாடு.
இதையெல்லாம் மீறி பெண்ணை காலால் எட்டி உதைப்பது என்பது குடிகாரனும், மனநோய் உள்ளவனும், அதிகார மமதையின் உச்சத்தில் அடிமைபடுத்தும் எண்ணம் கொண்ட இழிசெயல். அந்த காவல்துறை நாயின் இந்த செயல் நேற்றுமட்டும் ஏதோ எதார்த்தமாக நடந்த செயலாக இருக்க வாய்ப்பில்லை, அவன் குடும்ப பெண்களிடமிருந்தே அவன் இப்போக்கை தொடர்ந்திருக்க வேண்டும்.
மேலும் திருச்சி போக்குவரத்து காவல்துறை அனைத்து ஆய்வாளர்களுக்கும், உதவி ஆய்வாளர்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ.10,000 அபராத வசூல் செய்ய வேண்டும் என்று நிர்ணயதிருப்பதாகவும் செய்திகள் வருகிறது. அதன் அழுத்தமும் சேர்ந்தே இப்படி வரு செயல் நடந்துள்ளது.
ஆகவே காவலன்(!) காமராஜ், மீது இரட்டை கொலை வழக்கும், திருச்சி காவல்துறை IG மீது கொலைக்கு தூண்டிய வழக்கும் பதியப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.