அணுகுண்டை விட மோசமான ஆயுதமா இவை..! என்ன செய்யபோகிறோம்..?

0 232

 

அணுகுண்டை விட மோசமான ஆயுதம் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும் முயற்சி :

நம் வருங்கால சந்ததியினருக்கு காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையாவது விட்டு வைக்க வேண்டும்

என்ற நோக்கத்துடனே இந்தப்பதிவை எழுதுகிறோம்.

காற்றில் இருக்கும் ஈரப்பதம் என்றால் என்ன ?
தாவரங்களும் மனிதர்களுக்கும் தண்ணீர் ( ஊற்றினால்) குடித்தால் மட்டும் போதும் உடலில் நீர்

சத்து வந்துவிடும் என்று நினைக்கிறோம் ஆனால் அதையும் தாண்டி காற்றில் இருக்கும் ஈரப்பதம்

மூலம் தான் தாவரங்களும் பல பெரிய மரங்களும் கூட தண்ணீர் இல்லாமல் இருக்கின்றன.
காற்றிலிருந்து கிடைக்கும் ஈரப்பதத்தை வைத்து தான் அவைகள் வாழ்கின்றன.

அறிவியல் வளர்ச்சி ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும் சில நேரங்களில் அவைகள் நமக்கு

மட்டுமல்ல நம் வருங்கால சந்ததியினருக்கும் பெரும் பாதிப்பை உண்டுபண்ணுவதாகவே

இருக்கிறது. அந்த வகையில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிஎடுத்து அதை தண்ணீராக

மாற்றி கொடுக்க வந்திருக்கும் இயந்திரத்தால் நாமும் நம் சமூகமும் அடையும் நன்மை தீமைகள்

பற்றி பார்ப்போம்.

நன்மைகள்.
1.  பாலைவனத்தில் கூட இந்த இயந்திரத்தின் உதவியால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை

தண்ணீராக மாற்ற முடியும்.
2. சுத்தமான தண்ணீர் கிடைக்கும்.
3. எங்கு வேண்டுமானாலும் மின்சாரத்தின் உதவியுடன் இந்த இயந்திரத்தை வைத்து தண்ணீர்

பெற்றுக் கொள்ளலாம்.

தீமைகள் :

1. காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் அருகில் இருக்கும் மரம் மற்றும் செடிகள்

முழுமையாக பாதிக்கப்படும். இதே நிலை தொடர்ந்தால் அவை காய்ந்து போகக்கூட வாய்ப்புகள்

அதிகம்.

2. மனிதனின் சருமம் மற்றும் தோல் வரண்டு போக வாய்ப்புகள் அதிகம்.ஞ

3. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைவதால் மழை வளம் குறையும்.

4.  ஒரு ஊரில் 100 இயந்திரம் இருப்பதாக வைத்துக்கொண்டால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் மிக

மிக சிறிய அளவில் தான் குறையும் , ஆனால் நகரத்தை எடுத்துக்கொண்டால் ஆயிரம் அல்லது

லட்சம் இயந்திரங்கள் பயன்படுத்தினால்  நகரம் நரகமாக மாறி பாலவனமாகக்கூட மாறும்.

ஆரம்ப கால கட்டத்திலே இது போன்ற இயந்திரங்களைத் தடை செய்வதற்கு அரசாங்கமும்

மக்களும் முயற்சி செய்ய வேண்டும்.

இது போன்ற இயந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கான படமும் , காற்றில் ஈரப்பதம்

குறைவதால் மனிதருக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பதை அடுத்த படம் தெளிவாக கூறுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.