என்ன சொல்லது என்றே தெரியவில்லை..! மிருகம் கூட புரிந்துகொள்கிறது மனிதர்களிடம் சென்றால் கொன்றுவிடுவார்கள் என்று..!

0 187

நேற்றைய தினம் தாராபுரம் நல்ல தங்காள் ஓடையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த வருடம் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ் நடப்பட்ட 12 முதல் 14 அடி வரை நன்கு வளர்ந்த மரக்கன்றுளுக்கு தீ வைத்து சென்றுவிட்டனர், 1500 மரங்கள் கருகியது, இன்று தண்ணீர் விட்டு உரிய உயிர்காக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்

குடல் எரிய குடித்துவிட்டு அப்படியே போக வேண்டியதுதானே குடிகார மேன்மக்களே, நிலை தடுமாறி போதையினால் மயங்கினால் எரிவது குடல் மட்டுமல்ல உங்கள் மொத்த உடலும் அற்ப பதர்களே, லட்சம் மரங்களை நடுவோம் தொடர்ந்து, ஆனால் நீங்கள் போனால் உங்கள் குடும்பத்தின் நிலை என்ன என சிந்திக்க விடாமல் செய்கிறது உங்கள் மது போதை.அது சரி சிந்திப்பது ஆறறிவிற்கே உரிய குணம்…!

மீண்டும் எச்சரிக்கிறோம்  குடிப்பது தவறு அதிலும் குடித்துவிட்டு இயற்கையை அழிப்பது அதைவிட தவறு..!

இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும். இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தையும் ஒன்றிணைந்ததே ‘இயற்கை’என்கிறோம்.

நாம் வாழும் பூமி உருண்டை வடிவானது என்றும் துருவங்கள் இரண்டும் சிறிது தட்டையாக அமைந்துள்ளது என பாடசாலைகளில் படித்தது எல்லோருக்கும் நினைவு இருக்கலாம். பூமியின் மேற்பரப்பின் சுமார் 71 சதவீதம் நீரினால் ஆனது.  மிகுதியான உள்ள இடத்திலேயே மலைகளும் காடுகளும் நாம் வாழும் நகரமும் இருப்பதுடன் மனிதர்களும் மிருகங்களும் மற்றைய உயிரினங்களும் வாழ்கின்றன.

ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைகேற்ப அங்கு காணப்படும் தாவரங்களும் வித்தியாசப்படும், மிருகங்களும் பறவைகளும் கூட வித்தியாசமாக இருக்கும்.

பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலமானது, இயற்கையாகவே பல மேடு பள்ளங்களையும் மலைகளையும், பள்ளதாக்குகளையும், அடர்ந்த மலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால் இந்த நவீன யுகத்தில் மலைகளை சரிப்பதுகாடு மேடுகளையெல்லாம் அழிப்பது,கண்டதை உண்டு கழிவுகளை கண்ட இடங்களிலெல்லாம் குவித்து வருவது மட்டுமின்றி இன்று சுற்று சுழல் மாசினை ஒழிக்க முடியாமல் கழிவுப் பொருளைக் கரை சேர்க்க வழி இன்றி உலக நாடுகள் எல்லாம் தட்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றனதீராத நோய்கள் நம்மில் குடி கொண்டு இருக்கின்றனவளரும் இளம்தளிர்கள் வகை வகையான நோய்களுக்கு ஆளாகின்றனஆக மொத்தத்தில் இயற்கையைப் பழி தீர்த்துக் கொண்டு விட்டோம்இன்னலுக்கு ஆட்பட்டுக் கிடக்கின்றோம் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.