சுவாசக்காற்று விற்பனையின் பின்னனி ரகசியுங்கள் என்ன..?

1 560

சென்னையில் சுவாசக்காற்று விற்பனை என்றால் அது பெரிய செய்தியல்ல காரணம் நகரம் வளர்ர்சி என்பார்கள்..!

சென்னையில் விற்பனைக்கு வந்த தூய்மையான காற்றை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.

நாடு முழுவதும் காற்றின் மாசு அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் தூய்மையான காற்று என்ற பெயரில் ஆக்சிஜன் கேன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஒருசில இணையதள வணிக நிறுவனங்களும் இது போன்ற விற்பனைகளை மேற்கொண்டு வருகின்றன. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிகப்படியான காற்று மாசு உள்ளதாக ஆய்வுகள் தொிவித்துள்ளன.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பூங்கா ஒன்றின் வாயிலில் கேன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

அவை என்ன என்று பொதுமக்கள் கேட்டனா். அதற்கு விற்பனையாளா்கள் தூய்மையான காற்று என்று தொிவித்தனா். இதனை கேட்ட மக்கள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.
விற்பனையாளா்கள் கூறுகையில் கேன் ஒன்றின் விலை ரூ.650.

இதனை சுவாசக் கோளாறு உள்ளவா்கள், சிறுவா்கள், பெரியவா்கள் என அனைவரும் பயன்படுத்தலாம் என்று தொிவித்துள்ளனா்.

காற்றைக்கூட காசு கொடுத்து வாங்கும் நிலை வந்துவிட்டதை உணா்ந்த பொதுமக்கள் எதிா்காலம் குறித்த அச்சத்தினை வெளிப்படுத்திச் சென்றனா்

காற்றை சுத்தபடுத்த ஆளுக்கு ஒரு மரம் நட்டு வளர்த்தாலே போதும் ஆனால் ₹650 கொடுத்து ஒவ்வொரு முறையும் அந்த கேன் காற்றை வாங்க வைப்பதே இவர்களின் வியாபாரம்..!

விழித்துக்கொள் தமிழா..!

You might also like
1 Comment
  1. அன்பு says

    தமிழ்நாடு என்ற நம்ப நாட்டுல எல்லோரும் ஃபேஷன் என்ற பெருல விளம்பரத்தை பாத்து ஏன் எதர்க்குனே தெரியாம மாறி பொய்யிடுறாங்க இதனால வர விபரீதங்களை கண்டு கொள்வது இல்லை இவங்கள எப்படிதா திருத்துறது. வருத்தமாக இருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.