நேசமிகு நீர் ஆர்வலர்களுக்கு மற்றும் ஓர் மழைநீர் புரட்சி

0 558

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.

நேசமிகு_நீர்_ஆர்வலர்களுக்கு,

வணக்கம். வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தென்னிந்திய நகரங்களான பெங்களுரு,தெலுங்கானா, ஈரோடு, திருப்பூர், சித்தோடு, கோவை, கோபிசெட்டிபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, பாலக்காடு போன்ற இடங்களுக்கு எங்கள் மழைநீர் பயனுரைத்தல் மையத்தின் வருகையைப் பதிவு செய்துள்ளோம். மழைமிகும் தென்மேற்குப் பருவகாலத்தில் உயிர்நீரைச் சேகரிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால், மிகச்சரியான இந்த நேரத்தில் எங்கள் சேவையைப் பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்.

மழைநீர் சேகரிப்பு மற்றும் பாரம்பரியக் கிணறு சீரமைப்பாளர் நல்வாழ்வு என்ற இரண்டு முக்கியக் கொள்கைகளில் இயங்கும் எங்கள் குழு, நூறு சதவிகிதம் அறக்கட்டளையாகும். நீர் சேமிப்பு குறித்து நாள்தோறும் எங்களுக்கு வரும் இரண்டிற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை

(1)நீர் சேமிப்பு அமைக்க விரும்புபவர்
(2) தற்சமயம் விசாரிக்க மட்டும் செய்பவர் என்று வகைப்படுத்தி இருக்கின்றோம்.

நீர்சேமிப்பு அமைக்க விரும்பும் நண்பர்கள் அனைவருக்கும் தேவைப்படும் தகவல்களை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம்.

1. முதலில் எங்களை அணுகுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

2. திட்டம் அமைப்பதாக இருப்பின் மட்டுமே எங்களைக் களத்திற்கு அழையுங்கள்; வீண் செலவுகளையும், நேரத்தையும் தவிர்க்க கலந்தாய்வுக்குப் மின்னஞ்சலில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

3. எங்களுக்கான மூன்று வேலை உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உங்கள் பொறுப்பாகும்.

4. செயல்திட்டம் தொடங்கியது முதல், வேலை செய்பவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு. அது மட்டுமன்றி பணி நடைபெறும் இடங்களில் குழந்தைகளுக்குக் கட்டாயம் அனுமதி இல்லை.

5. நீர்நிலைகளின் வரைபடம், புகைப்படங்கள், கிணறு அல்லது குளங்களின் குறிப்புகள் என்று தங்களால் இயன்ற தகவல்களை முன்கூட்டியே எங்களுக்குத் தந்து உதவுங்கள்.

6. ப்ளம்பர், எலக்ட்ரீசியன், மண் அள்ளும் இயந்திரம் போன்ற முக்கியமான விஷயங்கள் வேலை தொடங்கும் அன்று தயாராக இருக்க வேண்டும். அது குறித்த தெளிவான முடிவுகளையும், முன்னேற்பாடுகளையும் எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

7. கிணறு தோண்டும் பணியாளர்கள் தேவைப்படுமெனில் ஹோசூரிலிருந்து வரவழைக்கும் வசதி உள்ளது. அவ்வாறான நேரத்தில், அவர்களுக்குமான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உங்கள் பொறுப்பு.

8. PVC பைப்புகள், ப்ளம்பிங் பொருட்கள், தண்ணீர்த் தொட்டிகள், வயரிங் உபகரணங்கள் அனைத்தும் வேலை தொடங்குவதற்கு முன்பு தயாராக வாங்கி வைத்திருக்க வேண்டுகிறோம். மழைநீர் வடிகட்டும் உபகரணங்கள் சந்தை விலையில் எங்களிடமே கிடைக்கும்.

9. எங்களால் இயன்றவரை திட்டமிட்ட நாட்களுக்குள் வேலையை நிறைவு செய்வோம்எனினும், இயற்கை இடர்களுக்குத் தகுந்தபடி அவ்வப்போது திட்டத்தில் சில மாறுதல்கள் செய்வதும் தவிர்க்க முடியாததாகிறது.

10. மிக முக்கியமாக , நீங்கள் தருவதாக ஏற்றுக்கொண்ட தொகையையும், இதர செலவுகளையும் எந்த காரணத்தைக் கொண்டும் குறைக்க அல்லது மாற்ற இயலாது. வேலை ஒரு வாரத்திற்கும் மேல் நீடிக்குமெனில், சனிக்கிழமைகளில் கூலி பட்டுவாடா செய்ய வேண்டும்.

வேறெந்தத் தகவல் தேவைப்பட்டாலும் பின்வரும் இந்தத் எண்களில் எங்களுடன் தொடர்பு கொண்டால் உதவக் காத்திருக்கின்றோம்.
வாட்சப்- 00447906290617
செல் – 00919894797501
மின்னஞ்சல்– [email protected]

நன்றி.
மழைநீர் பயனுரைத்தல் மையம்
(Rain Water Literacy Foundation RWLF)
Thanking a ardent well wisher for Tamil translation.

Kumar Duraiswamy அண்ணா அவர்களின் பதிவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.