பல்வேறு உயிரினங்களின் அழிவைச் சந்திக்கும் ஆபத்திலுள்ளது” நீங்களும் எச்சரிக்கையாய் இருங்கள்..!

0 318

“உலக சுற்றுச்சூழல் தினம்”

ஐப்பசி,கார்த்திகை அடைமழைக்காலம் என கிராமங்களில் சொல்வார்கள் ஆனால் அப்படியெல்லாம் இப்போதைக்கு மழையே பெய்வதில்லை…

மழையளவு என்னவோ குறையவே இல்லை ஆனாலும் வறட்சி…
நாட்களைப் பகிர்ந்து பரவலாக பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் ஒரே இடத்தில் கொட்டித் தீர்த்து விடுகிறது….

அக்னி வெய்யில் காலம் முடிந்த பின்னரும் பல இடங்களில் வெப்பத்தின் அளவு கூடுகிறது…

-இப்படி பருவகாலத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மையே சமீபத்திய வருடங்களில் கண்டுவருகிறோம்…

“பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த உலக வரலாற்றில், பூமி முதன்முறையாக, பல்வேறு உயிரினங்களின் அழிவைச் சந்திக்கும் ஆபத்திலுள்ளது”

– இதுதான் மிக நெருக்கடியான நேரம்.

மனிதப்பெருக்கம்… மனிதர்களிக்கான தேவைகள்…
இதனால் இயல்பிலிருந்து மாற்றி அமைக்கப்படுகிற புவிச்சூழல்….
இதன் தொடர்ச்சியாக

நாம் உருவாக்கியிருக்கும் பணமோ,மற்றைய வசதிகளோ நமது அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம்கூட உதவாது….
இந்த பூமி இயல்பு நிலையில் இருந்தால்மட்டுமே,அடுத்துவரும் சந்ததியினர் இயல்பாக வாழ முடியும்…

இந்த தினத்தைக்கூட பல பள்ளிகளின் அளவிலேயே அரசின் சுற்றறிக்கையின்படி அன்றாட கடமைகளில் ஒன்றாக சிறு நிகழ்வை நடத்தி கடந்து விடுவதை பார்த்து வருகிறேன்…

ஆனால் உண்மையிலேயே சாத்தியப்படக்கூடிய வகையில் முடிவுகளை எடுத்து புவிச்சூழலை மேலும் சிதைக்காமல் பாதுகாக்கப்படவேண்டிய கட்டாய சூழ்நிலையில்தான் இப்போதைக்கு இருக்கிறோம்…

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

நன்றியுடனும்,
நம்பிக்கையோடும்,
வாழ்த்துகளுடன்,
Ramamurthi Ram

You might also like

Leave A Reply

Your email address will not be published.