விசம் வைத்து பழுத்த மாம்பழம் விற்பனை பீதியில் மக்கள் கொண்டாட்டத்தில் வியாபாரிகள்..!

0 532

கார்பைட் கல்லில் பழுத்த விஷ மாம்பழங்கம் தாராள விற்பனை பொது மக்கள் விரக்தி அடைந்து வருகின்றனர்.

மாம்பழ சீசனையொட்டி நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளத ராஜபாளையம் பகுதியில் விளையும் சப்பட்டை ரக மாங்காயை சேல மாம்பழங்களை மொத்த வியாபாரிகள் வாங்கி குடோனில் இருப்பு வைக்கின்றனர்.

மொத்தம், மொத்தமாக வாங்கி வரும் மாங்காய் உடனே விற்பனையாகி கையில் பணம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் மாங்காய்களுக்குள் கார்பைட் கற்கள் வைத்து பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

இதனால் ஒரிரு நாட்களிலேயே மாங்காய் நல்ல நிறத்துடன் பழுத்து விடுகின்றன. இவற்றை தள்ளுவண்டி வியபாரிகள், பழக்கடை நடத்துபவர்கள் மொத்த வியாபாரிகளிடம் பெற்று கிலோ ரூ.30க்கு விற்பனை செய்கின்றனர்.

மாம்பழம் வாங்கும் நுகர்வோர், இயற்கை முறையில் பழுத்ததா, கல் வைத்து பழுத்தவயா என கேட்டால் வியபாரிகள் பேச்சு ஜாலத்தில் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.

தோப்பில் நாங்களே நேரில் சென்று வாங்கி பத்து நாட்களாக பழுக்க வைத்து விற்பனைக்கு எடுத்து வந்துள்ளோம் என ஏமாற்றுகின்றனர்.

வியபாரிகளின் பேச்சை நம்பி வாங்கி சென்றால் அந்த பழங்களில் எவ்வித சுவையும் இருப்பது இல்லை. இப் பழத்தை சற்று அதிகம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்று போக்கு ஏற்படுகிறது.

கார்பைட் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் விற்பனை நடப்பது நகராட்சி சுகாதார துறை அலுவலர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் மொத்த வியபாரிகளிடம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என பேரம் பேசி விடுவதால் கண்டும் காணாது போல் ஒதுங்கி விடுகின்றனர்.

பொதுமக்கள் மாம்பழம் மீதுள்ள ஆசையால் வியாதியை விலை கொடுத்து வாங்குகின்றனர்.


விச மாம்பழ விற்பனையை வெளிப்படையாக அனுமதிக்கும் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளை ஒதுக்கி விட்டு பொது சுகாதார துறை அதிகாரிகள் நேரிடையாக களம் இறங்கி விச மாம்பழங்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

அடுத்த பதிவில் விசம் வைத்து பழுத்த மாம்பழங்களை கண்டறியும் முறையை கூறுகிறோம்..!

உங்களுக்கு தெரிந்த கண்டறியும் முறைகள் இருந்தால் இங்கே கூறுங்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.