உண்மையாகவே செக்கு எண்ணெய் அப்புடின்னா என்னாங்க..? ஏமாற்றத்தில் சிக்கியிருப்பது மக்களா..?

0 1,118

சமீ­ப­கா­ல­மாக, மக்­கள், ஆரோக்­கி­ய­மான, பழ­மை­யான உணவு பழக்­கத்­திற்கு மாறி வரு­கின்­ற­னர். மிகவும் வரறவேற்க தக்க ஒன்றுதான்.

‘ஆர்­கா­னிக்’ காய்­க­றி­கள், செக்கு எண்­ணெய் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­து­வது அதி­க­ரித்­துள்­ளது. இதை பயன்­ப­டுத்தி, ஏரா­ள­மான கடை­கள் முளைத்­துள்ளன.

தமிழகம் முழுவதும் செக்கு எண்­ணெய் விற்­பனை கடை­கள், திடீ­ரென அதி­க­ரித்­துள்ளன. அதே போல் ஆர்­கா­னிக் என்ற பெய­ரில், மளிகை கடை, காய்­கறி கடை­களும் அதி­க­ரித்­துள்ளன.இது­வரை கிரா­மங்­களில் மட்­டுமே காணப்­பட்ட மரச்செக்கு, சமீப கால­மாக, சென்னை நக­ரில் ஏரி­யா­வுக்கு ஒன்று என முளைத்து வரு­கிறது.
இதில், எண்­ணெயை மட்­டுமே வாங்கி வந்து, அதை, செக்­கில் ஆட்­டிய எண்­ணெய் என, விற்­பனை செய்­யும் கடை­களும், ஆங்­காங்கே முளைத்­துள்ளன.

செக்கு எண்­ணெய்க்கு தற்­போது மவுசு ஏற்­பட்­டுள்­ளது. இதை பயன்­படுத்தி ஆங்­காங்கே, செக்குஎண்­ணெய் கடை­கள் முளைத்து வரு­கின்றன.மரச் செக்கு என்­றால், கடை­யும் செக்­கும், உர­லும் மரத்­தால் இருக்க வேண்­டும். வாகை மரம் என்­றால் இன்­னும் சிறப்பு.

அரவை நேர­மும் அதி­க­மாக இருக்க வேண்­டும். இத­னால், 20 சத­வீத எண்­ணெய் குறை­வா­கவே கிடைத்­தா­லும், கொழுப்பு அற்ற, உட­லுக்கு ஆரோக்­கி­ய­மான எண்­ணெய் கிடைக்­கும்.

இரும்பு செக்­கில் ஆட்­டும் எண்­ணெ­யால், உட­லுக்கு எந்த நன்­மை­யும் இல்லை. மேலும், கட­லை­யில் கல் இல்­லாத, கெட்­டுப்­போ­காத கட­லையை உப­யோ­கிப்­பது நல்­லது. இல்­லா­விட்­டால், மொத்த எண்­ணெ­யும் கெட்­டுப்­போக வாய்ப்­புண்டு.

தற்­போது, சுத்­த­மான நாட்டு மரச் செக்­கில் ஆட்­டிய கடலை எண்­ணெய், ஒரு கிலோ, 230 ரூபாய்க்கு கிடைக்­கிறது. தேங்­காய் எண்­ணெய், 320 ரூபாய்க்­கும், நல்­லெண்­ணெய், 290 ரூபாய்க்­கும் கிடைக்­கிறது.

எண்­ணெய்க்­கான எள் ஒரு கிலோ, 110 ரூபாய்க்­கும், கடலை, 70 ரூபாய்க்­கும், தேங்­காய், 140 – 170 ரூபாய் வரை­யி­லும் விற்­கப்­ப­டு­கிறது.
சான்­றி­தழ்
பொது­வாக, மரச் செக்­கில் எண்­ணெய் ஆட்டும் போது, 15 கிலோ கட­லையை அரைக்க, ஒன்­றரை மணி நேர­மா­கும். 5.5 – 6 கிலோ எண்­ணெய் கிடைக்­கும். அதுவே, இரும்­புச் செக்­கில் ஆட்­டி­னால், அரை மணி நேரத்­தில் ஆட்டி விடு­வர்.

எண்­ணெ­யும், 2 கிலோ கூடு­த­லாக கிடைக்­கும். உண்­மை­யாக மரச்­ செக்­கில் எண்­ணெய் ஆட்­டு­பவர்­கள், செக்கை பரி­சோ­திக்க அனு­ம­திப்­பர்.

நன்மை செய்கிறோம் என்ற பெயரில் பல நிறுவனங்கள் இந்த மோசடியை செய்கிறது..!

நீங்கள் வாங்குவது செக்கு எண்ணை என்றால் ஒருநாள் சென்று பாருங்கள் உண்மையாகவே அவர்கள் செக்கில் ஆட்டுகிறார்களா என்று..!

தயவு செய்து இதனை பகிருங்கள் காரணம் இன்று சிறிய அளவில் ஏமாற்றுபவனே நாளை நிறுவனம் என்ற பெயரில் பெரிய அளவு ஏமாற்றுவான்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.