தமிழ்நாட்டில் எதற்காக சினை ஊசி அறிமுகமானது இன்று அவையே எப்படி ஆக்கிரமிப்பானது..?

0 1,483

30 வருடங்களுக்கு முன்பு வரை மாடுவளர்க்கும் 90% வீடுகளிலும் பெரும்பான்மையான நாட்டுமாடுகளும் ஒரு சில வடநாட்டு மாடான சிந்து மாடுகளுமே இருந்தது..!

சிந்து மாடுகளுக்கு உடல் கட்டமைப்பு வலுவாக இருக்காது ஆனால் பால் சற்று அதிகம் கறக்கும்..!

தமிழ் நாட்டின மாடுகளுக்கு உடல் வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கும் ஆனால் பால் குறைவாக கறக்கும் இதுவே மனிதனின் அதிக ஆசைக்கு வித்திட்டது..!

பால் வியாபாரம் அதிகரிகக்க தொடங்கியது நாட்டுமாடுகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது அந்த இடத்தை சிந்து ஆக்கிரமிக்க ஆரமிபித்தது..!

பால் மோகம் கொண்ட இந்தியர்களை கையில் அடக்க பிற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசு உதவியுடனே அவர்களின் நாட்டு மாடுகளின் விந்தனுக்களை இந்தியாவிற்குள் அனுமதித்து..! இது நாளையடவில் மாபெரும் வியாபாரம் ஆனாது.!

தமிழகத்தில் அந்த அளவிற்கு அவர்கள் எதிர்பார்தத் படி அந்த மாடுகளுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை அதை அறிந்த அவர்கள் தமிழக கால்நடைத்துறையை கையில் எடுத்தார்கள்..!

உள்ளூர் காளையினங்களை அழிக்க பல முயற்சி மேற்கொள்ளபப்ட்டது அனைத்தும் தோல்வியை தளுவியது..!

பிறகு கிராமத்திற்கு ஒரு கால்நடைத்துறை அதிகாரியை நியமித்தார்கள் பசுமாடுகள் பருவத்திற்கு வரும்போது வீடு தேடிவந்து இலவசமாகவே ஜெர்சி சினை ஊசி போட ஆரம்பித்தார்கள்..!

ஒருசிலர் மட்டுமே இதை புறக்கணித்து நாட்டு காளைகளுடன் பசுவை புணரவிட்டு நாட்டுமாடுகளையே உருவாக்கினர்..!

காளையை அழிக்க காரணம் தேடிய அவர்களுக்கு அதன் ஆணிவேர் ஜல்லிகட்டு என்று தெரியவும் அதை தடை விதிக்க பல முயற்சி எடுத்தார்கள் அதிலும் வென்றார்கள்

6 ஆண்டுகள் ஜல்லிகட்டு தடை நீடித்தது அவர்கள் எண்ணியபடியே காளை அழிய தெடங்கியது அடிமாடாக மாறியது..!

இந்த சமயத்தில் அவன் இலவசமாக வீடு தேடி வந்து செலுத்திய சினை ஊசியை வியாபார படுத்தினான் ஒரு சினை ஊசியின் விலை ₹250_500 வரை விலை வைத்தான்..!

எங்கே சில ஊர்களில் மட்டுமே நாட்டுகாளைகள் தொழிலுக்கு வளர்க்கப்டடன பசுவை அவ்வளவு தூரம் பிடித்துசெல்ல சிரமப்பட்ட மக்களும் விலைகொடுத்து சினை ஊசி போட ஆரம்பித்தார்கள்..!

அந்த பத்து ஆண்டு இடைவெளியில் அவன் எண்ணியது போலவே மாடுவளர்க்கும் அனைவரது வீட்டிலும் 90% ஜெர்சி(cross) சிந்து (cross) மாடுகளை உருவாக்கிவிட்டன் 10% நாட்டினங்கள் மட்டுமே வளர்க்கப்பட்டு கெண்டிருந்தது..!

இது தொடரும் என்று எண்ணிய அவன் எண்ணத்தில் தமிழர்கள் மண்ணையள்ளி போடவேண்டிய நிலை வந்தது

ஜல்லிகட்டு போராட்டம் இதை முடிந்தவரை தடைசெய்ய போராடிய அவனுக்கு தோல்வி தளுவியது..!

2017-2018 ல் நாட்டு மாட்டு காளையினம் ஒரு ஆண்டில் தோராயமாக 22572 புதிகாக ஜல்லிகட்டிற்கு வளர்க்கப்படுள்ளது..!

இதை தமிழக அரசு கால்நடைதுறையும் வெளியிடவில்லை இந்திய கால்நடைதுறையும் வெளியிடவில்லை..!

பிறகு எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்பீர்கள் ஆம்..! ஒவ்வோரு மாட்டு சந்தைக்கு விவசாயத்தை காப்போம் குழு சென்று அங்கு எடுத்த புள்ளிவிபரம் இது..!

இதில் முன்னிலை (கண்ணபுரம் சந்தை,மணப்பாறை சந்தை)

அவன் எண்ணம் தோற்றுப்போகும் தருவாயில் மீண்டும் சினை ஊசி இலவசம் வீடு தேடிவந்து போடப்படும் என்று தமிழக கால்நடைதுறை களம் இறங்கியுள்ளது..!

சினை ஊசியை புறக்கணித்து நாட்டுமாடுகளும் புணரவிட்டு தரமான நாட்டினங்களை பாதுகாப்போம்.!

விவசாயத்தை காப்போம் குழுவின் பூச்சுக்காளை (காங்கேயம்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.