சிசேரியன் தொழிற்சாலைகள் உருவாகிறது..! உணர்ந்தும் உணராமல் செல்கிறார்கள்..! பணம் விளையாடுகிறது..!

0 466

சுகப்பிரசவம் என்பதே காணாமல் போய், ஸீசரியன் ஆபரேஷன் மூலம் மட்டுமே குழந்தை பிறக்க செய்து தனியார் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் லாபம் ஈட்டும் தொழிற்சாலைகளாவே மாறி விட்டன.

இப்போது இந்த மருத்துவ தொழிற்சாலையில் இன்னொரு மிக பெரும் லாபம் கொடுக்கும் தொழில் செயற்கை கருத்தரிப்பு.

காளான்களை போல எந்த விதமான கட்டுப்படும் மேற்பார்வையும் இன்றி நடந்து கொண்டிருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை பார்க்கும் போது, இன்றைய தலைமுறை அத்தனை பெரும் இயற்கையாக பிள்ளை பெரும் தகுதியை இழந்து விட்டார்களா என்று சந்தேகம் வருகிறது.

சேர்ந்த முதல் நாள் முதல் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு (குழந்தை பிறப்பு வரை)ஒவ்வொரு தம்பதியரிடமும் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொண்டால், செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லாத ஆஸ்பத்திரியே இல்லை என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.


இதில் எத்தனை பேருக்கு உண்மையாகவே பிரச்னை இருக்கிறது என்பது கடவுளுக்கே இல்லை இந்த ஆஸ்பத்திரிகளுக்கே வெளிச்சம் .

நன்றி வாசகர் : சுஜாதா ஜெயராமன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.