“பத்தாயிரம்,” என்று அவனிடம் இருந்து உடனடியாகப் பதில் வந்தது.

0 372

கரும்பலகையில் ‘1000’ என்று எழுதி விட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்றுக் கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் ‘10000’ என எழுதி விட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

“பத்தாயிரம்,” என்று அவனிடம் இருந்து உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் ‘010000’ என்று எழுதி விட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

“அதே பத்தாயிரம்” என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, “ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின் தொடர்ந்து செல்லும் போது, அதன் மதிப்புக் கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும் போது, அதற்கு மதிப்பு எதுவும் இல்லை.

அது போன்றது தான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின் தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.

அதுவே தலைகீழாக அமைந்தால்… பதில் என்னவென்று உனக்கே தெரியும் என்று முடித்தார்…

முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத் தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் நிச்சயமாகப் புரியும்…

கற்றவரைப் பின் தொடருங்கள்…

வாழ்வின் அர்த்தம் கண்டிப்பாக விளங்கும் √

படித்ததில் பிடித்தது

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.