இறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் மனிதனை மட்டுமே எச்சரிக்கிறது..! என்ன செய்ய போகிறாய் மனிதா..?

0 490

எவ்வளவோ மனிதர்களை கடந்து வந்தாலும் சில விலங்குகள் மனிதர்களால் நிறப்ப முடியாத இடத்தை கூட பாசத்தில் நிரப்பிவிடும்..!

காரணம் விலங்குகளுக்கு பணம் பெரிதல்ல..! ஆனால் மனிதர்களுக்கு..?

சரிவாங்க நம்ம வெள்ளையன பத்தி பாப்போம்..!

2007 ஈன்ற கோம்பை இனத்தின் குட்டி இவன் என்னோடு பலவருடங்கள் உணர்வோடு உரையாடிவிட்டு கேடு கெட்ட மனித இனத்தால் முடமாக்கப்பட்டவன்..!

விலங்குகளிடம் இருந்து பயிரை காக்க யாரோ வயலை சுற்றி விசம் வைத்துள்ளார்கள் போல அதை தெரியாமல் தின்றுவிட்டான்..!

அன்றில் இருந்து கால்கள் முடமாக்கப்பட்டது..!
ஒட்டம் காட்டிய கால்கள் நடக்கவே சிரமப்பட்டது..!
நெல் வயலை சுற்றி நெல் கதிர்களை தின்னும் மயில்களை விரட்டுவதில் இவனை மிஞ்ச இந்த ஏரியாவில் வேறொருவன் கிடையாது..? பறக்கின்ற மயிலும் இவனை கண்டால் தரையிறங்க அஞ்சும்..!

முகம் தெரியா நபர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்தால் ஒரு ஆட்டம் காட்டிவிடும்
முகம் தெரிந்த நபர்கள் வந்தால் முகத்திலயே முத்தமிடும்..!

காளையனுக்கும் காவலனுக்கும் ஒரு தொடர்பு உண்டு சல்லிகட்டில் அவிழ்த்த காளையன் சென்ற இடத்திற்கே அழைத்து செல்லும்..!

இப்படியெல்லாம் சுற்றி திரிந்த கால்கள் மனிதனால் முடமாக்கப்பட்டது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.