அத நீ சொல்ரீயா உன்ன மாறி தான் ரொம்ப பேரு ஊருக்கு உத்தமனா வாழ்ரீங்க..!

0 1,845

விபச்சாரி எனும் பொதுவுடமை

ஊட்டி வேலை விசயமாய் சென்ற சூரியா ஓரு நாள் அங்கே தங்க வேண்டிய சூழ்நிலை ஆனது அங்கே ஜோதி எனும் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினான்.

ரூம் சர்வீஸ் : சார் தண்ணீ எல்லா வருது சார் எல்லா ரெடி பன்னிட்டேன் வேர ஏதும் வேனுமா
சார்

சூரியா : ஜீ உடம்பெல்லா அசதியா இருக்கு கொஞ்சம் பக்கத்துல ஏதும் மசாஜ் சென்டர் இருக்கா

சர்வீஸ் : என்ன சார் இப்புடி கேட்டுட்டீங்க ரூம் சர்வீஸ் கூட இருக்கு Per night 1,500 ல இருந்து Starting உங்க Range எவளோ

சூரியா : ஏய் நான் என்ன கேக்குறன் நீ என்ன சொல்ற என்ன பாத்தா எப்படி தெரிது

சர்வீஸ் : சரி விடு சார் நல்ல Offer உனக்கு புடிக்கலனா போ

சூரியாவின் மனதில் ஓர் தடுமாற்றம் பதைபதைப்பு தப்பா சரியா என குழப்ப நிலை எத்தனை நாள் தான் இப்படி வேதாந்தம் பேசுவது அதையும் பார்துடலாம

சூர்யா: தம்பி அது இங்க பிரச்சனை ஏதும் வந்துடாதே

சர்வீஸ் : அப்புடி வா சார் வழிக்கு போய் ரெடி ஆவு சார் 1 Hr ல தங்க சிலை போல பொண்ணு வரும் சாப்புடு.

1 மணி நேரம் ஓர் யுகமாய் மாறியது கால சக்கரம் அவனுக்கு மட்டும் அவ்வளவு மெதுவாய் சுற்றியது ஆனால் அவன் எண்ண சக்கரம் வேகமாய் சுற்றியது கதவை திறக்கும் ஓசை கேட்டது மெய்யாகவே தங்க சிலை ஓன்று வெள்ளி கொழுசு போட்டு வந்தால் சிவந்த உடைக்கு ஏற்றார் போல சிவப்பு உதட்டு சாயம் அய்யய்யோ ஓரு நிமிடம் இவள் சூரியாவின் பள்ளி தோழி பாரதி ஆயிற்றே

சூரியா : ஏய் பாரதி நீ எங்க இங்க

பாரதி : அட நம்ம சூரியா நீயும் வந்துடியா நல்லதா போச்சு

சூரியா : ஏய் என்னடி சொல்ற ஏன்டி இதெல்லா உனக்கு என்னடி ஆச்சு அய்யோ

பாரதி : டேய் டேய் இப்போ என்ன ஆச்சு எனக்கு நல்லா தானே இருக்கேன்.

சூரியா : ஏய் நீ எப்படி இது உள்ள வந்த

பாரதி : டேய் அத கேட்கவா வர சொன்ன காசை வீனாக்காத வா

சூரியா : ஏய் என்னடி இப்படி ஆகிட்ட

பாரதி : என்ன எப்படி ஆகிட்டேன் எங்கப்பா செத்து 12 பாதிலயே போனேன்ல அதுக்கு அப்புறம் தான் எல்லா பிரச்சனையும்

சூரியா : என்னாச்சுடி

பாரதி : ஏன்டா அதெல்லாம் அப்பா வாங்குன கடன் அதிகமாச்சு நானும் அம்மாவும் வேலைக்கு போனோம் அம்மா வேலைக்கு போன இடத்துல குளம் இருந்த இடத்துல கட்டிடம்கட்டுனதால அது அம்மா மேல சரிஞ்சு ஆஸ்பிட்டல் சேத்தேன். லட்ச ரூபா செலவு ஆச்சு பாதி தான் குணமாச்சுஎன் தங்கச்சியும் பெரிய மனுஷி ஆகிட்டா. சின்ன சின்ன வேலை பாத்தா சரிகட்ட முடிட்யாதுனு தெரிஞ்சவன் பேச்சை கேட்டு சென்னைல வேலைனு சொல்லி என்ன ஓரு ரூம்ல அடைச்சு வித்துட்டாங்க 2 வருசம் அங்கே போச்சு இப்போ நான் சுத்தாதே ஊரே இல்ல என்னை சுத்தாத பேரே இல்ல

சூரியா : என்ன இருந்தாலும் தப்பு தானடி

பாரதி : அத நீ சொல்ரீயா உன்ன மாறி தான் ரொம்ப பேரு ஊருக்கு உத்தமனா வாழ்ரீங்க நான் அப்புடி இல்லடா ஊருக்கு கெட்டவனாலும் என் மனசார எந்த தப்பும் பன்னலடா. உனக்கு உடம்பு பசி எனக்கு வயித்து பசி உன் பசி தீத்து எம் பசி தீத்துகுரேன்

சூரியா : (கண்ணீர் சிந்துகிறான்)

பாரதி : ஏன்டா அழுற எனக்கு சிரிப்பு தான் வருது என் அழுகை எல்லாம் பல பேரு அவங்க வியர்வை வச்சு தொடச்சுடுவாங்க அழுகை எல்லா எனக்கு வரதே இல்லடா. என் உடம்பு பூரா தழும்பு இருக்கு நான் சேலை கட்டுறதே அதை மறைக்க தான் . நான் நிறைய அழுதுடேன்டா நீ உன் வேலைய பாரு

சூரியா : எங்க போரபாரதி : நீ என்னை இனிமே தொட மாட்ட என் தொழிலை பாக்கனும்ல இராத்திரி எரிஞ்சா தான் என் வீட்டுல அடுப்பு எரியும்

சூரியா : பாரதி உன்னை என் கூடவே சந்தோஷமா வச்சுகனும்னு ஆசை ஆனா என்னால அது முடியாது இன்னைக்கு ஓரு ராத்திரியாச்சும் சந்தோஷமா வச்சுகுறேன் நீ நிம்மதியா தூங்கு நான் பணம் குடுத்துடுறேன் Please

பாரதி : (ஓரு நீண்ட சிரிப்புடன்) நான் ராத்திரி தூங்கிரொம்ப நாள் ஆச்சு

அன்று அந்த அறை விளக்கு அணைக்க படவில்லை அவள் ஓரு குழந்தை போல அயர்ந்து தூங்கினால் இவன் அவள் முகம் பார்த்தபடி கண் தூங்கி விழித்தான் அவள் அறையில் இல்லை அவளுக்கு பதிலாய் இருந்ததோர் காகிதம்

பாரதி : ( காகிதத்தில்) நண்பனே நன்றிகள் எனை ஓர் இரவு தூங்க அனுமதித்தமைக்கு. எந்த ஆண் மகனும் என் இரவு தூக்கத்தை விரும்பியதில்லை. உன் பணம் எனக்கு தேவையில்லை உடம்பை வித்தாலும் உழைப்பு இல்லா காசை பெருவதில் விருப்பமில்லை என்றும் உங்கள் தோழி..

விளக்கைதேடும் விட்டில் பூச்சுகளுக்கு.

யார் மனதையும் புண்படுத்த அல்ல

ஆண்களும் மாறுங்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.