உலகின் ஆகச்சிறந்த பகல் கொள்ளை யாதெனில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை…!

0 1,764

மூட்டை வடிவில் இருக்கும் இதன் விலை… ஒன்று 37 ரூபாய்.. அநியாயம்.. சக்தி கொடுக்கும் பத்து முட்டை விலையே 37 ரூபாய்தான் என்பதுதான் அதில் வேதனையான விஷயம்…

அப்படி 35 ரூபாய்கு ஏதாவது ஒர்த்தாக ஏதாவது இருக்கின்றதா என்று பார்த்தால் அதில் சின்ன பிளாஸ்டிக் பொம்மையும் சின்ன சாக்லேட்டும் இருக்கின்றது…

இதில் பிள்ளைகளை கவரும் விஷயம் என்னவென்றால் அந்த பேக்கில் என்ன என்ன பொம்மை இருக்கும் என்ற சர்ப்பிரைஸ்தான் பிள்ளைகளை கின்டர் ஜாய் அதிகம் கவருகின்றது என்பேன்..

தட்டியில் ஒட்டி இருக்கும் சீட்டுகளை 25காசு கொடுத்து கிழித்தால் ஜல்லடை, பலூன், சாக்லேட், சிலேட், பலப்பம், 5 ரூபாய் பத்துருபாய் 20 ரூபாய் என்று என்று லக்கில் ஏதாவது பிரைஸ் விழும் என்ற ஆர்வம்தான் முக்கியகாரணம்.

மிட்டாய் வாங்கி தின்னாமல் 25 காசு கொடுத்து சிட்டு கிழித்து தள்ளுவோம்… அதுவும் சற்று பொடைப்பாக இருக்கும் சீட்டில்தான் விஷயம் இருக்கின்றது என்று துப்பறியும் வேலை எல்லாம் செய்து கிழிப்போம்.. காரணம் ஆர்வம்..

அந்த ஆர்வம் தான் கின்டர்ஜாய் விஷயத்திலும் என்ன பொம்மை உள்ளே இருக்கின்றது என்ற ஆர்வமும் அது கொடுக்கும் முக்கியத்துவமும்…

ஒரு முட்டை சைஸ் கின்டர் ஜாய் 37 ருபாய்க்கு விற்கப்படுகின்றது.

 

பெற்றோர்கள்… பகல் கொள்ளை அடிக்கும் கின்டர் ஜாய் ஓழிக்க வேண்டும்

அதற்கு பதிலாக எள்ளு உருண்டை பொரிகடலை கடலைமிட்டாய் போன்ற ஆரோக்கிய வாழ்வுக்கு திரும்புங்கள் இதில் பெரிய விசியம் என்னவென்றால் படித்த பெற்றோர்களே 99% இதனை வாங்கி கொடுக்கின்றனர்…!

ஆசையை தூண்டி வியாபாரம் செய்கிறார்ள்…

தூண்டில் மீனாய் மாட்டிக்கெள்ள வேண்டாம்…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.