தண்ணீரை தேடிய பயணம்..! வாழ்வா சாவா..? இன்று நேரில் கண்ட சம்பவம்..!

0 3,257

  ஆமாங்க முன்னெல்லாம் பம்பு செட்டுல இருந்து வாய்க்கால் வழியாக வயலுக்கு தண்ணீ போகும் ஆனால் இப்பொல்லாம் அப்புடி இல்லீங்க 90% குழாய் மூலமா தான்…!

இது கூட ஒருவகையான விவசாய அழிவுதாங்க..!

பறவைகள் விலங்குகள் எல்லாம் வாய்க்கால் தண்ணீய குடுச்சிட்டு போய்டும் ஆனா இப்போ மனிதனுக்கே குடிக்க தண்ணியில்ல இது எங்க விவசாயத்துக்கு அப்புடின்னு நகரமக்கள் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவர்களுக்கு தெரியவில்லை போல நீரில் விளைந்த உணவை உண்கிறோம் என்று…!
நீரின்றி அமையாது உலகு(யிர்)

நானும் அயோக்கியோன் தான் வாய்க்கால் தண்ணிவிட்டு விவசாயம் பண்ணுற அளவுக்கு கேணில தண்ணி இல்லிங்க அதனால குழாய்ல தாண் தண்ணீ கொண்டு போறாம்..!

நிலக்கடலை காட்டுக்கு தண்ணீபாய்ச்ச போகும் போது மீன் கொத்தி தண்ணீரை தேடி அழைந்து மயங்கி கிடந்தது.

ஆட்களை கண்டால் பறந்துவிடும் இருந்தும் உடலில் நீர்சத்து இல்லா காரணத்தினால் பறக்க முடியாமல் மயங்கி கிடந்தது..!

நானும் கையில் எடுத்து தண்ணீரை நோக்கி பயண் செய்து அதன் வாயில் போதுமான அளவு தண்ணீரை விட்டேன் மயக்க நிலை தெளிந்தது..!


இன்று அதற்கு தண்ணீரை கொடுத்து உயிரை காப்பாற்றிவிட்ட ஆணவத்தில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது நாளை நான் தண்ணீருக்கு என்ன செய்வேன் என்று மனதில் கேட்டது

இதற்கு என்னதான் பதில் முடிவு நீங்களே கூறுங்கள்…!

என் கண்ணில் பட்டது ஒரு பறவை ஆனால் தினம் தினம் ஒராயிரம் பறவைகள் உயிரை விட்டுகொண்டுதான் உள்ளது..!

எது எங்கு செத்தால் நமக்கு என்ன ஏரிய அழித்து கட்டிடமும் ஆற்றை மூடி ஆலையும் குளத்தை மூடி ஓயின்சாப்பும் கட்டுவோம் என்கிறது அரசாங்கம்..! முடிந்தவரை உங்கள் வீட்டு அருகில் ஏதாவது ஒரு பானையில் பாத்திரத்திலோ நிழலில் தண்ணீர், தானியங்கள் வையுங்கள்..!

முடிந்த அளவு மரம் வளருங்கள்…! குழந்தைகளை இயற்கையை ரசிக்கவிடுங்கள்..!

இன்று வேண்டுமானால் பறவைகளின் மரண ஓலம் காதில் கேட்கலாம் விரைவில் மனிதர்களின் மரண ஓலமூம் கேட்கும்

தண்ணீரை சேமியுங்கள் வன உயிர்களை பாதுகாருங்கள்..!

நன்றி வணக்கம்

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.