திருச்சியில் எதையேட்சையாக நடந்த ஒரு சம்பவம்..! குழந்தைகள் வளர்ப்போர் படியுங்கள்..!

0 683

திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள இந்த யானை மார்க் மிட்டாய் கடைக்கு சமீபத்தில் சென்றேன் , அப்போது அங்கு நடந்த சம்பவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

எனது 2 வயது மகளுடன் சென்று இனிப்பு பூந்தி வாங்கினேன் . அப்போது கடை ஊழியர் நான் வாங்கிய பூந்தி இல்லாமல் 50 கிராம் அளவுள்ள பூந்தியை குழந்தை கையில் மடித்து கொடுத்தார் .

எதற்க்காக இது என்று கேட்டேன் ?
குழந்தைக்கு நான் வாங்கி இருக்க எதற்கு இந்த பூந்தி என்று கேட்டேன்
கடை உரிமையாளர் இது எங்கள் கடையின் பாரம்பரியம் என்று கூறினார் . எனக்கு ஆர்வம் அதிகமானது .

அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன் எங்கள் கடை 50 லிருந்து 60 வருடமாக இந்த தொழில் செய்து வருகிறோம் .

அப்போது உள்ள கால கட்டத்தில் சுத்தமான நெய்யில் செய்யத மிட்டாய் என்றால் அது நம்ப கடை மிட்டாய் தான் அவ்வளவு சுவையாக
இருக்கும்

பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளை அழைத்து வந்து இனிப்பு பலகாரங்களை வாங்கி செல்வார்கள் அப்போது அவர்கள் வாங்கிய இனிப்புகளை குழந்தைகள் கடையின் வாசலில் வைத்து பிரித்து தருமாறு வீட்டிற்க்கு செல்லும்
வரை அவர்கள் வாங்கிய பொட்டலங்களை பிரிக்க சொல்லி பெற்றோர்களிடம் அடம் பிடித்து அழுகும்.

நம் கடைக்கும் வரும் குழந்தைகள் அழுத படி வீட்டிற்கு செல்ல கூடாது என்பதற்க்காக இப்படி வழங்கினோம் இன்றும் இதை பாரம்பரியமாக செய்யது வருகிறோம் . குழந்தைக்கு கொடுக்கும் இந்த இனிப்பிற்கு காசு வாங்குவது இல்லை என்று கூறி நகர்ந்தார் உரிமையாளர் .

இந்த சம்பவத்தில் ஒன்று புரிந்து கொண்டேன். குழந்தைகளை அவர்களது மிட்டாய்கடை
குழந்தையாக பார்த்தது இன்றைய கார்ப்பரேட் உலகமோ குழந்தைகளை வியாபார சந்தையின் நுகர்வோராக பார்க்கிறது

உதாரணமாக ( கிண்டர் ஜாய் ) என்ற சாக்லேட் பந்து போன்ற முட்டை வடிவிலான இனிப்பு விலை 45 ரூபாய் கொள்ளை லாபம் குழந்தைகளை வைத்து பார்க்கிறது . இதனை பெற்றோர்களும் சற்று சிந்தியுங்கள் இது போன்ற பாரம்பரிய கடை இனிப்பு பலகாரங்களை வாங்கி குழந்தை கு கொடுங்கள் எந்த கெடுதலும் வரத்து சுத்தமானது ..

You might also like

Leave A Reply

Your email address will not be published.