சிவகா ர்த் திகேய னுக் கு வில்ல னா கும் மு ன்ன ணி இய க்கு னர் ..!! சற் றும் யா ரும் எதி ர்ப் பார் க்கா த ஒன் று ..!! இணை ய த்தில் கசி ந்த தக வல் ..!! இ தோ நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 271

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது .அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப்  இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பின்னர் இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படி தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆன சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இருப்பது மண்டேலா படத்தின் இயக்குனரான,

மடோனா அஸ்வின் அவர்கள் தான் . இந்த படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படியான நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பிரபல முன்னணி இயக்குனர்,

ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது .இந்த வகையில் தமிழ் சினிமா உலகில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் மிஷ்கின். பின்னர் இதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவரின் படங்களில் தனித்துவமான ஒளிப்பதிவும் , காட்சியமைப்பும் இருப்பது தான் சிறப்பான ஒன்று. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பதற்கு இயக்குனர் மிஷ்கின் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது .மேலும் விரைவில் இந்த  படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.