பிழை ப்ப தே க ஷ்டம் எ ன்று சொ ல்லி விட் டார் கள் ..!! வெ ண்ணி லா கப டி குழு நடி கருக் கு இப் படி யொ ரு நிலை மை யா ..?? அப்ப டி என் ன தா ன் ஆ ச்சு இவ ருக் கு ..?? இ ணை யத் தை கல க்கு ம் வீடி யோ ப திவு ..!!

0 331

தமிழ் சினிமா உலகில் கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு.  இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து சூரி ,அப்புகுட்டி ,சரண்யா மோகன் போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர் .இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன் . பின்னர் இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம் ,

வெண்ணிலா கபடி குழு 2 படத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் நடிகர் ஹரி வைரவனின்  தற்போதைய நிலை குறித்த வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது . அந்த வகையில் நன்றாக சென்று கொண்டு இருந்த இவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம் .

அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் பலரும் அவர் இறந்து விட்டார் என்று கூறிவிட்டார்களாம். இருந்தாலும் நம்பிக்கை விடாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் அவரின் மனைவி. அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கோமா ஸ்டேஜில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

பின்னர் 15 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார் நடிகர் ஹரி . அதன் பிறகு மெல்ல மெல்ல அவருக்கு சுயநினைவு வந்துள்ளது . அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்ததால் கை ,கால் எல்லாம் அவருக்கு வீங்கிப் போய் விட்டது . பலரும் அவர் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லியும்,

நம்பிக்கையை விடாமல் இருந்துள்ளார் அவரின் மனைவி . பின்னர் கோமாவில் இருந்து வந்த பிறகு அவர் நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் . அப்போது அவரின் உடல் எடை அதிகமாக இருந்ததால் அவரின் மனைவியால் தனியாக சமாளிக்க முடியவில்லை . பின்னர் மருத்துவர்கள் உதவியுடன்,

அவரை கொஞ்சம் கொஞ்சமாக நடக்க வைத்திருக்கிறார்கள் . இதனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கவும் , பேசவும் செய்கிறாராம் நடிகர் ஹரி . மேலும் இவரை நடக்க வைப்பதற்கு 10 நாட்களுக்கு எட்டாயிரம் ரூபாய் மருத்துவ செலவு ஆகிறதாம்.  அவருடைய சொந்த வீட்டை விற்று தான் இவருடைய கடனையும்,

மருத்துவ செலவுகளையும் அவரது மனைவி பார்த்துக் கொண்டு வருகிறாராம் . அதுமட்டுமல்லாமல் அவருடைய மனைவி பெட்டிக்கடை ஒன்றை வைத்திருக்கிறாராம்.  அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் இவரது மருத்துவ செலவையும் குடும்ப செலவையும் பார்த்து வருகிறாராம். இந் நிலையில் அவர் பேசியிருக்கும் வீடியோ பதிவு இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.