கம லுக் கு வில் லனா க நடி த்தத ற்கு விஜய் சே துபதி வா ங்கிய சம் பள ம் இவ்வ ள வா ..?? அடே ங்க ப்பா இத் த னை கோ டி சம்ப ள மா ..?? வெ ளி யான தகவ லை பார்த் து ஆச்சிரி யம டைந்த ர சி கர் க ள் ..!!

0 252

விஜய் சேதுபதி ஒரு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் தற்போது தமிழ்மொழியை யும் தாண்டி பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் துணை நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் . அதுமட்டுமில்லாமல் ஹீரோ ,வில்லன் ,குணச்சித்திர கதாபாத்திரம் ,சிறப்பு கதாபாத்திரம் என்று அனைத்திலும் கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி .

மேலும் இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம்  ரசிகர்களை கவர்ந்தார் என்று கூட கூறலாம். இதையடுத்து  சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதனை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் .

மேலும் நடிகர் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான ரஜினி மற்றும் விஜய்க்கு வில்லனாக நடித்த நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார் .

இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது . மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி ,பகத் பாசில் ,நரேன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .

இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் விக்ரம் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.