இ ந்த நடி கை தா ன் என் பட த்தி ல் நடி க்க வே ண் டும் என் று ..!! அந் த நடி கையி ன் வீட்டிற் கே செ ன் ற க மல் ..!! அது வும் எந் த படத் திற் கு தெ ரியு மா ..?? இணை ய த் தில் கசிந் த தக வ ல் ..!!

0 196

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் . இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார் . மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3ம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் தன்னுடைய படத்தில் பிரபல நடிகையை நடிக்க வைக்க அவரின்  வீட்டிற்கே சென்று கேட்டாராம் கமல் . அந்த வகையில் கடந்த 1996ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் .

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.  இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த திரைப்படம் ஒரு சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து வந்தது . இதையடுத்து இந்த படம் மீண்டும் தொடங்க இருப்பதாக கமல் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது  அவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளதால் இந்தியன் 2 படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் . இதனால் அவரின் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்க கேட்டுள்ளனர் .ஆனால் நடிகை திரிஷா நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.

இதற்கு காரணம் ஏற்கனவே கமல்ஹாசனுடன் இணைந்து மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் போன்ற படங்களில்  நடித்து இருந்தார் திரிஷா. இந்த  இரண்டு திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாததால் மீண்டும் கமலுடன் நடிக்க வேண்டுமா என்று யோசித்திருக்கிறார் நடிகை திரிஷா.

ஆனால் கமல்ஹாசன் நேரடியாக திரிஷாவின் வீட்டிற்கே சென்று இந்தியன் 2 படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.  அதன் பிறகு தான் நடிகை திரிஷா இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.