முன் னணி நடி கர்க ளான விஜ ய் , அஜி த் தே செய் யா த ஒன் றை செ ய்து வரு ம் ஜி வி பிர கா ஷ் ..!! அப் படி என் ன செய் தார் தெரி யு மா ..??வெளி யா ன தக வ லை கண் டு விய ந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 123

ஜிவி பிரகாஷ் ஓர் இந்திய இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் அவர்களின் உறவினர் ஆவார் . மேலும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இதனை தொடர்ந்து ஓரம்போ ,கிரீடம் ,பொல்லாதவன் ,குசேலன் ,அங்காடித்தெரு ,ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம் போன்ற பல படங்களுக்கு,

இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . இப்படி தொடர்ந்து இசையமைத்து வந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகராக அறிமுகமானார் . அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந் நிலையில் ஜிவி பிரகாஷ் அறிமுகமான முதல் திரைப்படத்தில் இருந்து தற்போது வரை நடிக்கும்,

அனைத்து படங்களிலும் புதுமுக இயக்குனர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் .அந்த வகையில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சாம் அண்டனை அறிமுகம் செய்து வைத்தார் ஜிவி பிரகாஷ் . தற்போது சாம் அண்டன்  பல திரைப்படங்களை இயக்கி,

பிரபல இயக்குனராக வளர்ந்து வருகிறார் . அதேபோல சமீபத்தில் வெளியான பேச்சிலர் படத்தின் மூலம் இயக்குனர் சதீஷ் செல்வகுமாரை  அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல படங்களை இயக்கும் வாய்ப்பு அமைந்து வருகிறது.  இவரைத் தொடர்ந்து செல்பி என்ற படத்தின் மூலம் இயக்குனர் மதிவாணன் என்பவரை,

அறிமுகம் செய்து வைத்தார்.  இவருக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் விஜய் , அஜித் போன்ற பெரிய நடிகர்களே அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத போது தொடர்ந்து புதுமுக இயக்குனர்கள் மட்டுமே வாய்ப்பு கொடுத்து வரும் ஜி வி பிரகாஷை பல இயக்குனர்கள் புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.