தனு ஷோ டு மட் டும் என்னு டை ய மக ளை நடிக் க விட மா ட் டேன் ..!! பிர பல நடிகை யி ன் தந் தை அ திரடி ..!! இதற் கு இப்படி யொ ரு கார ணம் இரு க் கா ..?? வெளி யா ன உ ண் மை த க வ ல் இ தோ ..!!

0 1,152

தற்போது  தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ்.  இவர் தற்போது தமிழ் மொழியையும்  தாண்டி தெலுங்கு, இந்தி , ஆங்கில மொழி படங்களிலும் நடித்து வருகிறார் . மேலும்  தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம்,  மாறன் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை . இதனை  தொடர்ந்து திருச்சிற்றம்பலம் ,நானே வருவேன் ,வாத்தி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

அதுமட்டுமில்லாமல் தற்போது தனுஷ் இயக்கத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்த நிலையில் , அதில் பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் பெயர் கூறப்பட்டுள்ளது . அவர் தமிழ் படங்களில் நடிக்க விருப்பத்துடன் இருப்பதாகவும் இதனால் தான் நடிகர் தனுஷ் ,

அவரை நடிக்க வைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது . ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி போனி கபூர் தம்பதியின் மகள் ஆவார் . இந்நிலையில் தன்னுடைய மனைவியின் உயரத்திற்கு தன்னுடைய மகளையும்  கொண்டு செல்ல போனிகபூர் முயற்சி செய்து வருகிறார் . அந்த வகையில் தனுஷ் இயக்கும் படத்தில் ,

ஜான்வி கபூர்  நடிக்க உள்ளதை அறிந்து கொண்ட போனிகபூர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டாராம் . இதற்கு முக்கிய காரணமே நடிகர் தனுஷின் விவாகரத்து என்று தான் கூறப்படுகிறது . மேலும் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததால் ரஜினிகாந்திற்கும் , தனுஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ,

இதனால் தனுஷுக்கு படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.  இதனை தெரிந்துகொண்ட போனிகபூர் தன்னுடைய மகளை தனுஷுடன் சேர்ந்து நடிக்க வைத்தால் அவரின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.