இந் த நடி கை என் னுட ன் நடித் தா ல் சரி யாக வரு மா என் று கே ட்ட ரஜி னி ..!! பின் னர் அந் த நடிகை யா ல் சூப்ப ர் ஹி ட் டான தி ரை ப்ப டம் ..!! ரஜினி யே கூறி ய த கவ ல் ..!! வெளி யான வீடி யோ ப தி வு இ தோ ..!!

0 231

ஜோதிகா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் , முகவரி , குஷி ,தெனாலி, சினேகிதியே போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஜோதிகா.  பின்னர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பின்னர்  கடந்த 2006ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் . மேலும் திருமணத்திற்கு பின்பு  நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் . தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார் . ஆனால் அவரின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ஐஸ்வர்யாராய் தானாம்.  அவரால் நடிக்க முடியாமல் போனதால் நடிகை ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கு ரஜினியிடம்,

கூறியுள்ளார் இயக்குனர் பி வாசு.ஆனால் ரஜினி ஜோதிகா மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாராம் . அதற்கு காரணம் சந்திரமுகி படத்திலேயே ஜோதிகாவின் கதாபாத்திரம் தான் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் . அதாவது கயிறில் நடக்கும் சர்க்கஸ் மாதிரி.  அதுமட்டுமில்லாமல் ஜோதிகா இதற்கு முன்னர் ,

இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது இல்லாததால் ரஜினிக்கு சற்று சந்தேகம் இருந்துள்ளது .பின்னர் ஜோதிகா சந்திரமுகியாக மாறும் காட்சியை பார்த்து ரஜினியை மெய்சிலிர்த்துப் போய்விட்டாராம் . அந்த அளவிற்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாராம் நடிகை ஜோதிகா.

அதுமட்டுமில்லாமல் 6 மணிக்கே ஷூட்டிங்கிற்கு ரெடியாகி விடுவாராம் நடிகை ஜோதிகா. பின்னர் நடிகை ஜோதிகாவின் நடிப்பை பார்த்ததும் இயக்குனர் பி வாசுவை அழைத்து  இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக தான் அமையும் என்று கூறினாராம் ரஜினிகாந்த் . தற்போது அவர் பேசிய வீடியோ பதிவு  வெளியாகியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.