க மல் நடி ப்பி ல் வெளி யா கி 500 நாட்க ளு க்கு மே ல் ஓடி ய ஒ ரே திரை ப்பட ம் இது வா ..?? அது வும் இ ந்த முன் ன ணி இயக் குன ரின் பட மா ..?? வெளி யா ன தக வ லை கண் டு வியந் து போ ன ரசி கர் க ள் ..!!

0 269

கமல்ஹாசன் ஓர் பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . கடந்த சில வருடங்களாக எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டு வந்தார்.  இதையடுத்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ,நரேன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் .

அதுமட்டுமில்லாமல் நடிகர் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூட சொல்லலாம் .

இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3ம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது . இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இப்படியொரு நிலையில்  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ,

அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது . அப்போதைய காலகட்டத்தில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படம் அனைத்துமே 100 நாட்களை எளிதில் தொட்டுவிடும் .அதுவும் அப்போது கமலின் படங்களுக்கு ஏகபோக வரவேற்பு என்று கூட சொல்லலாம் .

அப்படி கமலின் சினிமா பயணத்தில் 500 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படம் தான் மரோசரித்ரா . கடந்த 1978ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் ,சரிதா, மாதவி போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.