என் னது , வி க்ரம் நடி த்த சே து பட த் தில் சசி குமா ர் நடித்து ள்ளா ரா ..?? இ வ் வளவு நா ளா இ து தெ ரியா ம போச் சே ..?? பல ரும் பா ர்த்தி டாத பு கை ப்ப டம் ..!! இ தோ நீங் க ளும் பா ரு ங் க ..!!

0 344

சசிகுமார் ஓர் இந்திய திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இதன் பிறகு கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  ஒரு நடிகராகவும் , இயக்குனராகவும் இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும்  வரவேற்பை பெற்று தந்தது என்று கூட  சொல்லலாம் .

பின்னர் இதனைத்தொடர்ந்து நாடோடிகள் ,போராளி ,சுந்தரபாண்டியன் ,குட்டிப்புலி ,தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக பசங்க ,ஈசன், போராளி ,சுந்தரபாண்டியன், தலைமுறைகள்,

அப்பா போன்ற பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.  மேலும் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாக அமைகிறது . இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.  குற்றப்பரம்பரை என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கும் ,

இந்த படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நடிகர் சசிகுமார் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அந்தவகையில் சேது படத்தில் சசிகுமார் உதவி இயக்குனராக பணியாற்றி வந்ததால்,

அந்த படத்தில் கல்லூரி மாணவராகவும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் . அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  இதைப்பார்த்த ரசிகர்கள் என்னது சேது படத்தில் சசிகுமாரும் நடித்திருக்கிறாரா , இத்தன நாளா இது தெரியாம போச்சே .? என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.