13 வய திலே யே கம ல் படத் தில் நடி ப்பத ற்கு கிளம் பி வி ட் டேன் ..!! ஆ னா ல் என் னை நி ராக ரித் து விட் டார் கள் ..!! ம னம் திற ந் த விஜ ய் சேது பதி ..!! வெ ளி யா ன சுவா ரி சிய தக வ ல் ..!!

0 91

தற்போது உலக நாயகன் என்ற அங்கீகாரத்துடன் வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் . கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டு வந்ததால் எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.  இதையடுத்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல் .  இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆக இருக்கிறது .

மேலும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி ,பகத் பாசில், நரேன் ,காளிதாஸ் ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்  சூர்யா ஒரு  சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது . இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.இந்நிலையில் இந்த படத்தின் ,

இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது . இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இந்த விழா மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பல விஷயங்களை கூறி இருந்தார் . அதில் கமல் 60 பங்க்ஷன் அப்பவே கமல் சார் முன்னாடியே நான் நடிக்கணும்னு கேட்டேன் .

ஆனால் அது இப்போ தான் நடந்துச்சு .ஆனா அவருடன் நடித்தாலும் எனக்கு இப்போது இன்னொரு ஆசை வந்திருக்கு. அவருடைய டைரக்ஷன்ல ஒரு படத்துல நடிக்கணும்னு என்று கூறியிருந்தார் . அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தன்னுடைய 13 வயதிலேயே கமல்ஹாசனின்  நம்மவர் படத்தில் நடிப்பதற்கு ஆடிசனுக்கு  சென்றிருக்கிறார் .

ஆனால் அப்போது அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் அவரை நிராகரித்து விட்டார்கள் . மேலும் கமல் சாருடன் நான் இப்ப சேர்ந்து நடித்தது என்னோட புண்ணியமா  அல்லது என்னுடைய முன்னோர்கள் செய்த புண்ணியமான்னு  தெரியல என்றும் கூறியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் .இப்படி வெளியான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.