என க்கு ம் வடிவே லுக் கும் சுத்த மாக செட் டாகவி ல் லை ..!! கஷ் டப்ப ட்டு தா ன் அவ ருட ன் நடித் தே ன் ..!! அதுவு ம் எ ந்த படத் தி ல் தெரி யு மா ..?? வெ ளிப்ப டை யாக கூறி ய பிர பல நடி கை ..!!

0 909

தமிழ் சினிமா உலகில் கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குசேலன் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பசுபதி, நயன்தாரா, மீனா, வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் அப்போது ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் தான் நடிகை சோனா.

மேலும் இந்த படத்தில் வடிவேலு மற்றும் சோனா இருவரின் கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்அவுட் ஆனது என்பது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் நடிகை சோனா . அந்த வகையில் அவர் கூறியதாவது, இந்த படத்தில் வடிவேலுக்கும் எனக்கும் சுத்தமாக செட்டாகவில்லை .

மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த படத்தில் அவருடன் நடித்தேன் . மேலும் அப்போது வடிவேலுக்கு போட்டியாக இருந்த விவேக்குடன் சோனா குரு என் ஆளு என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார் . அதுமட்டுமில்லாமல் விவேக்குடன் நடிக்கும்போது மிகவும் பிடித்து  நடித்ததாகவும்,  தனக்குத் தெரியாத பல நுணுக்கங்களை,

விவேக் கற்றுத் தந்தார் என்றும் கூறியிருந்தார். நடிகர்  விவேக் தன்னுடைய கதாபாத்திரத்தையும் மீறி மற்றவர்களின் கதாபாத்திரத்திலும் அக்கறை கொண்டவராக இருந்து ஊக்கப்படுத்துவார் என்றும் கூறியிருந்தார் நடிகை சோனா .ஆனால் வடிவேலு அப்படி இல்லை , குசேலன் படத்தில் அவருடன் மிகவும்,

கஷ்டப்பட்டு தான் நடித்தேன் என்று கூறியிருந்தார் . மேலும் ஆரம்பத்தில் கிளாமர் நடிகையாக வலம் வந்த இவரால் சினிமாவில் நீண்ட நாட்கள் வலம் வர முடியவில்லை . இதையடுத்து தற்போது சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா, அபி டெய்லர்  போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை சோனா…

You might also like

Leave A Reply

Your email address will not be published.