என் னது , ஆ ர்யா விற்கு த ங்கை யா க நயன் தா ரா நடி க்க இருந் தா ரா ..?? அது வும் இந் த பிர பல இயக் குன ரி ன் பட த் திலா ..?? தற் போ து அ ந்த இய க்குன ரே கூறி ய தக வல் ..!! என்ன வென் று நீ ங்க ளே பாரு ங் க ..!!

0 117

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. அதுமட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் . சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார் நடிகை நயன்தாரா.  இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து தற்போது o2, கனெக்ட் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார் .

அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒரு படம் ,இந்தியில் ஒரு படம் ,தெலுங்கில் ஒரு படம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார் . தற்போது நடிப்பதை தாண்டி தனது காதலன் விக்னேஷ் சிவனுடன்  இணைந்து பல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார் நடிகை நயன்தாரா . மேலும் தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் ஆர்யா.

இவருடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை நயன்தாரா .இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ராஜா ராணி என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் இவர்கள் இருவருக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.  இப்படி தொடர்ந்து ஜோடிகளாக நடித்து வந்த இவர்கள் இருவரும் முதன்முறையாக,

இணைந்து அண்ணன் தங்கையாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார்களாம். அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அரண்மனை. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா மற்றும் ஆர்யா தானாம் . மேலும்  இயக்குனர் சுந்தர் சி நடித்த கதாபாத்திரத்தில் ஆர்யாவும், அவருக்கு தங்கையாக நடித்திருந்த

ஆண்ட்ரியா கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிகை இருந்தார்களாம் . பின்னர் கால்சீட் காரணமாக இவர்கள் இருவரும் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது. இதை அண்மையில் நடந்த பேட்டியில் இயக்குனர் சுந்தர் சியே  கூறியிருந்தார்.இப்படி வெளியான தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.