இந் த புகைப் ப டத் தில் இருக் கும் சிறு மி யா ரெ ன்று தெரி கிற தா ..?? அட, இ ந்த வி ஜய் பட நடி கை தா னா ..?? வெளி யா ன புகை ப்பட த் தை பார் த்து இ வரா என் று வி யந் து போ ன ரசி கர் க ள் ..!!

0 166

சுனைனா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் வெர்சஸ் குமரி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2008ஆம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது .

பின்னர் மீண்டும் நகுலுடன் இணைத்து மாசிலாமணி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் நடிகை சுனைனா. இதையடுத்து யாதுமகி ,வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் ,திருத்தணி ,நீர்ப்பறவை , சமர் போன்ற பல படங்களில் நடித்து வந்தாலும் இவரால் ஒரு முன்னணி நடிகையாக வர முடியவில்லை .

இதனிடையே விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சுனைனா . மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது . தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுனைனா .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . கடைசியாக இவர் தமிழில் வெளியான ட்ரிப் என்ற படத்தில் நடித்திருந்தார் . இதையடுத்து தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுனைனா அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அப்படி தற்போது அவரின்  சிறுவயது புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் அட நடிகை சுனைனா இது.? சிறு வயதில் அழகாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.