என் னது , கூ குள் குட் டப் பா படத்தி ல் ரோ போ வாக நடி த்தது இ ந்த நடி கரா ..?? மு தல் முறை யா க வெளி யா ன வீடி யோ ப திவு ..!! இவ ரா என் று ஆச் சிரிய ம டை ந்த ரசி க ர் கள் ..!!

0 241

தமிழ் சினிமா உலகில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் கூகுள் குட்டப்பா . இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம்  உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கி இருந்தனர் . இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார் ,தர்ஷன் ,லாஸ்லியா ,யோகி பாபு ,மனோபாலா போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார் . இத்திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரித்திருந்தார் .

இப்படி வெளியான இந்த திரைப்படம் மக்களுடைய கலவையான விமர்சனத்தை பெற்று ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரோபோவாக நடித்த நடிகர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது . அந்த வகையில் கூகுள் குட் டப்பா படத்தில் ரோபோவாக நடித்தவர் தான் நடிகர் இளம்பாரதி .

இவர் இந்தப் படம் உட்பட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து சமீபத்தில் தன்னுடைய மனைவியுடன் இணைந்து பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது ,நான் வளரவில்லை என்பது கடவுள் செய்த  வினை . என்னுடன் எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பேர் உள்ளனர். அதில் ஆண்கள் மூன்று பேர் , பெண்கள் இரண்டு பேர் .

இதில் என்னுடைய இன்னொரு சகோதரரை தவிர மற்ற எல்லோரும் உயரமாக தான் இருப்பார்கள் .இப்படி உயரம் குறைவாக பிறப்பதற்கு காரணம் சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது தான் . மேலும் என்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவரும் சொந்தக்காரர்கள் . நான் பத்து வயது இருக்கும் வரைக்கும் எனக்கு இந்த பிரச்சனை தெரியவில்லை.

10 வயதுக்கு பிறகுதான் நான் வரமாட்டேன் என்பது தெரிந்தது. அதன் பிறகு என்னுடைய பெற்றோர்கள் மருத்துவமனையில் எனக்கு ட்ரீட்மென்ட் பார்த்தார்கள். அப்போது வசதியில்லாததால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது . பலரும் என்னுடைய உயரத்தை பார்த்து கிண்டல் கேலி செய்துள்ளனர் .

மேலும் எங்களின் வாழ்க்கையை நோக்கி நாங்கள் ஓடிக் கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் நான் சினிமாவில் ஒரு ஆபீஸில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தேன் . அதன் மூலம் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . அப்படியே சினிமாவில் நுழைந்து தற்போது வரை நடித்து வருகிறேன் .

அதுமட்டுமில்லாமல் எனக்கு சினிமா என்பது நிரந்தரம் இல்லை. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உயரம் குறைவான எங்களை மாதிரி ஆட்களுக்கு நிரந்தரமான வேலை வேண்டும் என்றும் கூறியிருந்தார் நடிகர் இளம்பாரதி அவர்கள் . தற்போது அவர் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.