நீங்க சாப்பிடுறது பிளாஸ்டிக் இட்லியா?

0 193

இட்லி சிறந்த காலை உணவென்பது, உலக அளவில் பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்ட ஒரு விஷயம். ஆனால், அந்த இட்லியை சாப்பிடுவதால் கூட உடலில் புற்று நோய் செல்கள் உருவாக்கம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிப்பது தென்னிந்தியர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைப்பது போன்ற செய்தியாக இருக்கிறது. அமிர்தமாகவே இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில், செயலில் விஷம் துளிக் கலந்தாலும் அந்த அமிர்தம் விஷமாக மாறிவிடும். அது போன்று தான் இதுவும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்…

பிளாஸ்டிக்!

அன்று இட்லி சமைக்கும் போது இட்லி மாவை காடாத்துணி தட்டில் வைத்து அதில் மாவூற்றி இட்லி சமைத்தனர். இன்று இட்லி அதில் சரியாக சமைக்கக் தெரியாதவர்கள், இட்லியை வேகமாக, முழுமையாக எடுக்க தெரியாதவர்கள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துகின்றனர்,

கப்!

மேலும், நீங்கள் சென்னை, கோவை போன்ற வெளியூர்களுக்கு சென்று வந்த நபராக இருந்தால் கப் இட்லியும் உங்களுக்கு பரிச்சயம் ஆகியிருக்கும். இது சிறிய அளவிலான பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்து கப் போன்ற உருவில் சமைக்கப்படும் இட்லிகள்.

ஆவியில் வெந்து சமைப்பது!

இட்லி என்பது ஆவியில் வேகவைத்து சமைக்கப்படும் ஆரோக்கிய உணவு. ஆனால், இது போன்ற பிளாஸ்டிக் பொருள் கலப்பு / பயன்பாடு சேர்த்து சமைக்கும் போது பிளாஸ்டிக் மூலக் கூறுகள் கலப்பு இட்லியுடன் சேர்ந்து புற்றுநோய் உண்டாகும் செல்களை உடலில் உற்பத்தியாக தூண்டுகின்றன.

வேறு பிரச்சனைகள்!

புற்றுநோய் செல்கள் தூண்டப்படுவது மட்டுமின்றி இரைப்பை கோளாறுகள், அஜீரண பிரச்சனை, செரிமான மண்டல கோளாறுகள், வயிற்று கோளாறுகள் என பலவன இதனால் உண்டாகிறது.

ஏன் இப்படி?

கையேந்திபவனில் இருந்து பெரிய நட்சத்திர ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தான் இந்த பிளாஸ்டிக் பேபர், கவர், கப்புகள் கொண்டு இட்லியை இம்முறையில் தயாரிக்கின்றனர். ஏன் இப்படி என்ற கேள்வியை முன் வைத்தால். இட்லி, உளுந்து சேர்த்து சமைக்கும் போது துணியில் ஒட்டிக் கொள்ளும் அதனால் சிரமம் ஏற்படும் என மிக சாதாரணமாக பதில் அளிக்கின்றன. ஆனால், அதன் விளைவோ புற்றுநோய் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்!

இது மட்டுமல்ல, நீங்கள் சூடான உணவுகளை பிளாஸ்டிக் தட்டில் வைத்து உண்பது. சுடசுட சமைத்த மதிய உணவுகளை பிளாஸ்டிக் லஞ்ச்பாக்சில் போட்டு அனுப்புவதனாலும் ஆரோக்கிய கேடுகள் உடலில் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.